Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே வின் அதிரடி முடிவு.. இளம் வீரர்களுக்கு வரப்பிரசாதம்... முழு விவரம் இதோ

சென்னை: ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.

மேலும் சிஎஸ்கே அணியின் மதிப்பு ஆறரை கோடி ருபாயை தாண்டியுள்ளது. தற்போது ஐபிஎல் 15வது சீசனுக்காக சிஎஸ்கே அணி தயாராகி வருகிறது.

இதற்காக 40 பேர் கொண்ட படை, சூரத்துக்கு சென்று புயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில், சிஎஸ்கே அணி இளம் வீரர்களுக்காக புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது.

ஒப்பந்தம் முறை

ஒப்பந்தம் முறை

ஐபிஎல் ஏலம் இந்த ஆண்டு உடன் முடிந்து விடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு, அணிகளே வீரர்களின் திறமைகளை ஆராய்ந்து அவர்களுடன் நேரடியாக ஒப்பந்தம் போடும் முறை கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக இளம் வீரர்களின் திறமையை அடையாளப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.

பயிற்சி அகாடமி

பயிற்சி அகாடமி

இதற்காக சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பாக கிரிக்கெட் அகாடமி தமிழகத்தில் நிறுவப்பட உள்ளது. சென்னை துரைப்பாக்கம் மற்றும் சேலத்தில் இந்த அகாடமி நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள இளம் வீரர்களை அடையாளப்படுத்தி, அவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படும்.

ஏப்ரலில் தொடக்கம்

ஏப்ரலில் தொடக்கம்

இந்த பயிற்சி மையம் வரும் ஏப்ரல் முதல் தொடங்க உள்ளது. இதில் சிறப்பாக செயல்படுபவர்களை சென்னை அணியில் விளையாட ஒப்பந்தம் வழங்கப்படும்- இல்லையெனில் ஏலம் மூலம் ஐபிஎல் தொடரில் விளையாடலாம். இது போன்ற பணியை கொல்கத்தா, மும்பை, டெல்லி போன்ற ஐபிஎல் அணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

வரப்பிரசாதம்

வரப்பிரசாதம்

ஆனால் சிஎஸ்கே, பள்ளி, கல்லூரி அளவில் ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி அதில் சிறப்பாக விளையாடும் வீரர்களை அடையாளப்படுத்தும் பணியை மேற்கொண்டது. அப்படி வந்த வீரர் தான் ஷாரூக்கான். சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் இந்த முயற்சி தமிழக கிரிக்கெட்டுக்கு ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, February 27, 2022, 16:00 [IST]
Other articles published on Feb 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+