சிஎஸ்கேவை பத்தி யோசிச்சாலே தோனிதான் நினைவுக்கு வருவார்... பாப் டூ பிளசிஸ் உற்சாகம்
ஷார்ஜா : சிஎஸ்கே குறித்து யோசிக்கும் போதெல்லாம் எம்எஸ் தோனி தான் நினைவுக்கு வருவார் என்று அந்த அணியின் பாப் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றைய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு அறிவிப்பீர்களா என்ற கேள்விக்கு கண்டிப்பாக இல்லை என்று பதிலளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தோனி
இந்நிலையில் பிட்னசுடன் உள்ளவரையில் தோனி கண்டிப்பாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார் என்றும் பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அபார வெற்றி
நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சிஎஸ்கே மோதிய நிலையில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை சிஎஸ்கே வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து அதன் பிளே-ஆப் கனவுக்கும் ஆப்பு வைத்துள்ளது. நேற்றைய போட்டியுடன் தொடரிலிருந்து பஞ்சாப் அணி வெளியேறியுள்ளது.

உறுதியுடன் பதிலளித்த தோனி
நேற்றைய போட்டியுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பீர்களா என்று போட்டிக்கு முன்னதாக தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அந்த கேள்விக்கு உறுதியுடனும் தெளிவுடனும் பதிலளித்த தோனி, கண்டிப்பாக இல்லை என்றும் அடுத்த ஆண்டும் தான் கண்டிப்பாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரிக்க முடியாது
இந்நிலையில், தோனியையும் சிஎஸ்கேவையும் தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது என்று அந்த அணியின் பேட்ஸ்மேன் பாப் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே குறித்து நாம் யோசிக்கும்போதே தோனி தான் நம்முடைய நினைவில் வருவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

தோனி கண்டிப்பாக வேண்டும்
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு தோனி கண்டிப்பாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் திட்டவட்டமாக கருதுவதாகவும் பிளசிஸ் மேலும் கூறினார். தோனியின் நேற்றைய பதிலிலிருந்து அடுத்த ஆண்டு மீண்டும் அவர் வலிமையாக ஐபிஎல்லில் பங்கேற்பார் என்ற உறுதியை அளித்துள்ளதாகவும் பிளசிஸ் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications