Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: சிஎஸ்கே அணியில் புதிய கோச்.. KKR அணியில் இருந்து வந்த ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஃபாஸ்டர்

சென்னை: 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஜேம்ஸ் ஃபாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் தலைமையிலான சிஎஸ்கே பயிற்சி குழுவில் ஜேம்ஸ் ஃபாஸ்டர் தற்போது இணைந்துள்ளார். ஏற்கனவே இந்த குழுவில் பேட்டிங் பயிற்சியாளராக மைக்கேல் ஹசியும், பந்துவீச்சு பயிற்சியாளராக எரிக் சிம்மன்ஸும் செயல்பட்டு வருகின்றனர்.

45 வயதான ஃபாஸ்டர், 2001 முதல் 2009 வரை இங்கிலாந்து அணிக்காக 7 டெஸ்ட், 11 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளின் பயிற்சி குழுவில் பணியாற்றியுள்ள இவர், சமீபத்தில் டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்கு ஐஎல்டி20 கோப்பையை வென்று கொடுத்துள்ளார். மேலும் தி ஹண்ட்ரட் தொடரில் பர்மிங்காம் பீனிக்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.

CSK James Foster Appointed as Chennai Super Kings Fielding Coach for IPL 2026 Season

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பல ஆண்டுகள் உதவி பயிற்சியாளராகவும், ஃபீல்டிங்பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். உலகெங்கிலும் பயிற்சி அளித்த பரந்த அனுபவம் கொண்ட இவரை வரவேற்று சிஎஸ்கே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மார்ச் 30 ஆம் தேதி கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டு தனது பயணத்தை தொடங்குகிறது. அதன்பிறகு சொந்த மண்ணான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 3 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடனும், ஏப்ரல் 5 ஆம் தேதி பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனும் மோதுகிறது. தொடர்ந்து ஏப்ரல் 11 ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியை சென்னையில் எதிர்கொள்கிறது.

நடப்பு சீசனுக்காக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே அணி மிகவும் பலத்துடன் தயாராகி வருகிறது. அனுபவ வீரர் தோனியுடன், ராஜஸ்தான் அணியில் இருந்து வாங்கப்பட்ட சஞ்சு சாம்சன், சிவம் துபே, டேவால்ட் ப்ரீவிஸ், நூர் அகமது, கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, ராகுல் சாஹர், சர்பராஸ் கான் என பல நட்சத்திர வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளதால் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

Story first published: Monday, March 16, 2026, 22:20 [IST]
Other articles published on Mar 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+