Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை- கொல்கத்தாவுடன் இன்று மோதல்

CSK meet KKR
டெல்லி: கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் இன்று சென்னையில் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய இக்கட்டான நிலையில் சந்திக்கிறது.

இரு அணிகளும் தலா 10 புள்ளிகளுடன் உள்ளன. இதில் செனஅனை அணி கொல்கத்தாவை விட ரன் ரேட்டில சற்று முன்னிலையில் உள்ளது. இருப்பினும் இன்றைய போட்டியிலும் மற்றும் உள்ள 2 போட்டிகளிலும் சென்னை வென்றாக வேண்டிய கட்டாயம். அதே நிலையில்தான் கொல்கத்தாவும் உள்ளது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டி இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா போட்டியாக மாறியுள்ளதால் இரு அணிகளும் வெற்றிக்காக வெறியுடன் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் தத்தமது முந்தைய ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியுள்ளன. சென்னையைப் பொறுத்தவரை உள்ளூர் மைதானத்தில் போட்டி நடப்பதால் உள்ளூர் வீரர்களுக்கு அது சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

குறிப்பாக முரளி விஜய் இன்றைய ஆட்டத்தில் வெடித்துக் கிளம்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 போட்டிகளில் அவர் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.

அதேபோல மாத்யூ ஹெய்டனும் இன்று அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவியாக இருக்க முயற்சிப்பார். டோணி, சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் ஆகியோரும் இன்று சிறப்பாக ஆடியாக வேண்டும்.

பந்து வீச்சில் போலிங்கர், அஷ்வின் ஆகியோரின் பங்கு முக்கியமானது. அதேபோல துஷாரா, ஜகதி ஆகியோரும் இன்று சிறப்பாக பந்து வீசினால் வெற்றி நிச்சயம் சென்னைக்குச் சாதகமாகும்.

மறுபக்கம் கங்குலி தலைமையிலான கொல்கத்தா அணி அடிபட்ட புலியாக வீறு கொண்டு எழ காத்திருக்கிறது. கெய்ல், மெக்கல்லம், கங்குலி ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அதேபோல ஆல்ரவுண்டர் மாத்யூஸும் தக்க சமயத்தில் கை கொடுக்கத் தவறுவதில்லை.

இரு அணிகளும் கிட்டத்தட்ட சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+