For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ச்சும்மா அதிருதுல்ல... பட்டையைக் கிளப்பும் சென்னை சூப்பர் கிங்ஸின் சூப்பர் ஸ்டார்கள்!

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 3வது சூப்பர் லோக்கல் சாலஞ்சே இதோ வந்து விட்டது. இந்த முறை சூப்பர் ஸ்டாரை கையில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இதற்கு முன்பு டீ ஆற்றுவது, சூப்பர் குத்து ஆகிய இரண்டு சவால்களை வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது 3வது சவாலை வெளியிட்டுள்ளது.

அதுதான் சூப்பர் ஸ்டார் சவால். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினி போல செய்து காட்ட வேண்டும்.

பேஸ்புக்கில்...

பேஸ்புக்கில்...

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் விளையாட்டில் மட்டுமல்ல, சைடு விளையாட்டுகளிலும் கில்லாடிகளாகவே உள்ளனர். அவ்வப்போது ஏதாவது போட்டியை வைத்து பேஸ் புக் மூலம் தங்களது ரசிகர்களை பிடியில் வைத்துள்ளனர்.

டீ ஆத்துங்க பாஸ்...

டீ ஆத்துங்க பாஸ்...

முதலில் சென்னை டீக்கடையில் ஒரு டீக்கடைக்காரர் டீ ஆற்றும் காட்சியை வீரர்களுக்குப் போட்டுக் காட்டி இதே போல டீ ஆத்துங்க பார்ப்போம் என்று வீரர்களுக்கு சவால் விடுக்கப்பட்டது. இதில் சில வீரர்கள் நிஜமாகவே நன்றாக டீ ஆத்திக் காட்டினர்.

குத்து டான்ஸ்...

குத்து டான்ஸ்...

அடுத்து சூப்பர் குத்து என்று ஒரு சவால். அதாவது வேட்டி அல்லது லுங்கி கட்டிக் கொண்டு டான்ஸ் ஆடுவது. அதுவும் குத்துப் பாட்டுக்கு.

நிஜ டான்சர்கள் போலவே...

நிஜ டான்சர்கள் போலவே...

அதில் அஸ்வின், பிராவோ, மெக்கல்லம் போன்றோர் நிஜமான குத்துப் பாட்டு டான்ஸர்களைப் போலவே ஆடிக் காட்டி அசத்தினர்.

சூப்பர்ஸ்டார்...

சூப்பர்ஸ்டார்...

தற்போது 3வது சவாலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட வசனங்களைப் பேசுவது, கூலிங் கிளாஸை ஸ்டைலாகப் போடுவது, மேனரிசத்தை இமிட்டேட் செய்வது என்று கலக்கியுள்ளனர்.

ஒரு தடவைச் சொன்னா...

ஒரு தடவைச் சொன்னா...

நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்ற வசனத்தை மொஹித் சர்மா, ஈஸ்வர் பாண்டே உள்ளிட்டோர் சொல்லிப் பார்ப்பது பார்க்கவே காமெடியாக இருக்கிறது.

என் வழி....தனி வழி...

என் வழி....தனி வழி...

என் வழி தனி வழி என்று பிராவோ கூறும்போது இது ஒரு வகையான ஸ்டைலாக இருக்கிறதே என்று ரஜினியே கூட நினைத்து ஆச்சரியப்படுவார்.

வீடியோ சாலஞ்ச்...

இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேஸ்புக்கில் இந்த 3வது சாலஞ்ச் வீடியோதான் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. நீங்களும் போய்ப் பாருங்கள்...

Story first published: Monday, October 6, 2014, 16:00 [IST]
Other articles published on Oct 6, 2014
English summary
The IPL team Chennai super kings has released a new video which is in Rajni style.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+