Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: ருதுராஜ் கேப்டன்ஷி படுமோசம்.. லக்னோ வென்றதுக்கே சிஎஸ்கே செய்த இந்த தவறு தான் காரணம்- சேவாக்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்ஷி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், விமர்சித்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான போட்டியில் பவர்பிளேயில் சுழற்பந்துவீச்சை பயன்படுத்தாதது பலவீனமான கேப்டன்சி என அவர் சாடியுள்ளார்.

அணியில் வெளிநாட்டு வீரர் இடம் இருக்க, ஃபார்மில் இருந்த அகீல் ஹுசைன் பெஞ்சில் அமர்த்தப்பட்டார். CSK-வின் ஒரே சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது, தனது நான்கு ஓவர்களில் 0/21 என சிறப்பாகப் பந்துவீசினார். பவர்பிளேயில் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் இல்லாமல் 86 ரன்களைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய சேவாக், "வேகப்பந்துவீச்சை சிறப்பாக ஆடும் இரண்டு ஆஸ்திரேலிய பேட்டர்கள் விளையாடியபோது, சுழற்பந்துவீச்சில் ஏன் தொடங்கவில்லை? குர்ஜப்நீத்தை கொண்டு வர ஏன் முன்கூட்டியே முடிவெடுத்தீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. கேப்டன்சி பலவீனமாக இருந்தது; பவர்பிளேயில் சுழற்பந்து வீச்சை நீங்கள் ஒருமுறை கூட முயற்சிக்கவில்லை," என்றார்.

CSK: இனி ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு ஃபைனல் மாதிரி.. பிளே ஆப் குறித்து பயிற்சியாளர் ஹஸி கருத்து

CSK: இனி ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு ஃபைனல் மாதிரி.. பிளே ஆப் குறித்து பயிற்சியாளர் ஹஸி கருத்து

தொடர்ந்து அவர், "மார்ஷ் போன்றோர் வேகப்பந்துவீச்சை நன்றாக ஆடுவதால் சுழற்பந்துவீச்சை ஒருமுறையாவது முயற்சித்திருக்கலாம். ஒரு சுழற்பந்து வீச்சாளரை முன்னதாகவே களமிறக்கியிருந்தால் விக்கெட் கிடைத்திருக்க வாய்ப்பு இருந்தது. ஒருவேளை சுழற்பந்து வீச்சாளர் நான்கு சிக்ஸர்கள் கொடுத்தாலும், வேகப்பந்து வீச்சாளர்களும் அப்படித்தான் கொடுத்தார்கள்," என்று விளக்கினார்.

"அதனால் தான் குர்ஜப்நீத்திற்கு பதிலாக அகீல் ஹுசைன் போன்ற ஒரு சுழற்பந்து வீச்சாளரை களமிறக்கியிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். பவர்பிளேயிலேயே நூர் அகமதுவை நான் பயன்படுத்தியிருப்பேன், ஏனெனில் அவர் சிக்ஸர் அடிக்க விட்டாலும்,, ஒரு விக்கெட் அப்போது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவர்களின் நடு வரிசை சரியாக செயல்படவில்லை," என்றும் சேவாக் திட்டவட்டமாக தெரிவித்தார்.

MS Dhoni: கடைசி போட்டியிலாவது விளையாடுங்கள் தோனி.. பத்ரிநாத் உருக்கம்.. சிஎஸ்கே அணிக்கு வார்னிங்

MS Dhoni: கடைசி போட்டியிலாவது விளையாடுங்கள் தோனி.. பத்ரிநாத் உருக்கம்.. சிஎஸ்கே அணிக்கு வார்னிங்

இவ்விமர்சனங்களுக்கு மத்தியில், சென்னையில் நடந்த முந்தைய ஆட்டத்தில், பவர்பிளேயில் களமிறக்கப்பட்ட அகீல் ஹுசைன், தனது இரண்டு ஓவர்களில் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்களை வாரி வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, May 16, 2026, 16:01 [IST]
Other articles published on May 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+