ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தன் மூலம் நடப்பு சீசனில் தொடர்ந்து 2 போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை ஜெய்ஷ்வால் சிதறடிக்க, முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 26 பந்துகளில் எல்லாம் 50 ரன்களை தொட்டது. பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து பட்லர், ஜடேஜா ஓவரில் 27 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய ஜெய்ஷ்வால் 26 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

இந்த நிலையில், ஆட்டத்தின் 13வது ஓவரில் தேஷ்பாண்டே அபாரமாக பந்துவீசி ஜெய்ஷ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் விக்கெட்டுகளை ஓரே ஓவரில் வீழ்த்த, ராஜஸ்தான் அணியின் ரன் குவிக்கும் வேகத்தில் தொய்வு ஏற்பட்டது. ஷிம்ரன் ஹேட்மயர் 8 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் ஜூரல் 15 பந்தில் 34 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.
203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, ராஜஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பொறுமையாக விளையாடினர். தொடர்ந்து 4 முறை அரைசதம் அடித்த கான்வே 16 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப, அதிரடியாக ரன் சேர்த்த ருதுராஜ் 29 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இம்பேக்ட் வீரராக வந்த ராயுடு முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். எனினும் சிவம் துபே சிக்சர்களாக விளாசி ரன்களை சேர்க்கமோயின் அலி 12 பந்துகளில் 23 ரன்களில் வெளியேறினார். கடைசி 3 ஓவரில் 58 ரன்கள் தேவைப்பட்டது. இது அடிபபதற்கு கொஞ்சம் அதிகம் என்பதால், சிஎஸ்கேவால் அதனை எட்ட முடியவில்லை.
ஆட்டத்தின் 18வது ஓவரில் சந்தீப் சர்மா வீசிய ஓவரில் 12 ரன்கள் மட்டும் தான் அடிக்கப்பட்டது. இதனையடுத்து 12 ஓவரில் 46 ரன்கள் தேவைப்பட, ஜேசன் ஹோல்டர் 9 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். இதனால், கடைசி ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட , சிஎஸ்கே 4 ரன்கள் மட்டுமே சென்றது. இதன் மூலம் சிஎஸ்கே அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணி கடைசியாக 4 முறை ராஜஸ்தானை எதிர்கொண்டு தோல்வியை தழுவியுள்ளது. மேலும் முதல் இடத்தில் இருந்த சிஎஸ்கே 3வது இடத்திற்கு சரிந்தது.