Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய தோனி.. சிஎஸ்கே ஹாட்ரிக் தோல்வி.. சிஎஸ்கே பேட்டிங் பரிதாபங்கள்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி மோசமான தோல்வியை தழுவியது.

டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இரு அணிகளும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் களமிறங்கியது.

சிஎஸ்கே அணியில் துஷ்பாண்டேவுக்கு பதில் கிறிஸ் ஜார்டன் களமிறங்கினார். இதனையடுத்து முதல் ஓவரை இந்திய வீரர் முகேஷ் சௌத்ரி வீசினார்.

தோனி சம்பவம்

தோனி சம்பவம்

முதல் பந்தே பவுண்டரி செல்ல, அடுத்த பந்திலேயே மாயங் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து , 2வது ஓவரை இங்கிலாந்து வீரர் ஜார்டன் வீசினார் முதல் பந்தே சிக்சருக்கு சென்றது இதன் அடுத்த பந்தே தோனி ஒரு ரன்அவுட் சம்பவத்தை செய்தார். பஞ்சாப் அணி 14 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்து தடுமாறியது. அப்போது களத்துக்கு வந்த லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

லிவிங்ஸ்டோன் அதிரடி

லிவிங்ஸ்டோன் அதிரடி

சௌத்ரி வீசிய ஒரு ஓவரில் 24 ரன்களை லிவிங்ஸ்டோன் விளாசினார். இதன் பின்னர் பிராவோ வீசிய ஓவரிலும் தவான் 16 ரன்களை பறக்கவிட்டார். இதனால் பஞ்சாப் அணி பவர்பிளேவில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்தது. லிவிங்ஸ்டோன் 32 பந்தில் 60 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் 180 ரன்கள்

பஞ்சாப் 180 ரன்கள்

அறிமுக போட்டியில் களமிறங்கிய ஜித்தேஷ் சர்மா 3 சிக்சர்களை பறக்கவிட்டு 17 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷாரூக்கான் 6 ரன்களிலும், ஓடியன் ஸ்மித் 3 ரன்களிலும் , ராகுல் சாஹர் 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே சொதப்பல்

சிஎஸ்கே சொதப்பல்

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. சிஎஸ்கே இப்படி ஒரு தொடக்கத்தை தரும் என ரசிகர்கள் கனவிலும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் 1 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். . இதே போன்று பஞ்சாப் அணியின் அறிமுக வீரர் வைபவ் அரோரா, அதிரடியாக விளையாடிய உத்தப்பாவை 13 ரன்களில் ஆட்டமிழக்க வைத்தார். இதனையடுத்து கேப்டன் ஜடேஜாவும் வைபவ் பந்துவீச்சில் டக் அவுட்ஆனார்.

சிவம் துபே அரைசதம்

சிவம் துபே அரைசதம்

இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயின் அலியும் ரன் ஏதும் எடுக்காத நிலையில் போல்ட் ஆனார். அணியை சரிவிலிருந்து காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடுவும் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் சிஎஸ்கே அணி 36 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து அதிரடியாக விளையாடிய சிவம் துபே 26 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

ஹாட்ரிக் தோல்வி

ஹாட்ரிக் தோல்வி

இதனால் சிஎஸ்கே ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. ஆனால் அதனை புல்டவுசர் விட்டு ஏற்றியது பஞ்சாப் அணி. சிவம் துபே 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே பிராவோ டக் அவுட்டாகினார். டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடிய தோனி 28 பந்துகளில் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின் வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினார். இதனால் சிஎஸ்கே அணி 126 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் ஹாட்ரிக் தோல்வியை சிஎஸ்கே தழுவியது.

Story first published: Sunday, April 3, 2022, 23:54 [IST]
Other articles published on Apr 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+