For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே-வின் "மாஸ்டர் பிளான்".. ஏலத்தில் தூக்கப்போகும் 3 வீரர்கள் யார்? தோனியின் கணக்கு இதுதான்!

சென்னை: கடந்த ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து மோசமான சாதனையுடன் வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), 2026 மினி ஏலத்தில் முக்கிய திட்டங்களுடன் களமிறங்குகிறது. ஜடேஜா, கான்வே போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில், ரூ.43.40 கோடி கையிருப்பில் வைத்துக்கொண்டு அணியை மீண்டும் கட்டமைக்க ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் எம்.எஸ்.தோனி கூட்டணி தயாராகி வருகிறது.

சிஎஸ்கே அணி ஏற்கனவே ஒரு பெரிய டிரேட் மூலம் சஞ்சு சாம்சனை உள்ளே கொண்டு வந்து விக்கெட் கீப்பிங் பிரச்சனையைத் தீர்த்துள்ளது. ருதுராஜ், துபே, டெவால்ட் பிரேவிஸ், தோனி ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்த்தாலும், ஜடேஜா மற்றும் சாம் கரண் விட்டுச்சென்ற ஆல்-ரவுண்டர் இடமும், பந்துவீச்சும் காலியாக உள்ளது.

இந்தக் குறையைத் தீர்க்க சிஎஸ்கே குறிவைக்கும் 3 முக்கிய வீரர்கள் மற்றும் அவர்களின் ஏல வியூகங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

CSK Master Plan for IPL 2026 Auction MS Dhoni s Target List of 3 Key All-Rounders and Spinners

ரவி பிஷ்னாய் - தவிர்க்க முடியாத தேர்வு

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுத் திட்டத்தில் முதல் பெயர் ரவி பிஷ்னாய் ஆகத்தான் இருக்கும். ஜடேஜா இல்லாத நிலையில், அணியில் ஒரு தரமான இந்திய ஸ்பின்னர் இல்லை. நூர் அஹமது இருந்தாலும், ஒரு இந்திய லெக் ஸ்பின்னர் தேவை.

மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் திறமை பிஷ்னாயிடம் உள்ளது. சேப்பாக்கம் மைதானத்திற்கு இவர்தான் சரியான தேர்வு. இவர் ரூ.9 முதல் 11 கோடி வரை ஏலம் போக வாய்ப்புள்ளது. இவரை எடுத்தால், வெளிநாட்டு வீரர்களுக்கான இடத்தை பேட்டிங் அல்லது வேகப்பந்து வீச்சுக்கு ஒதுக்கலாம்.

கேமரூன் கிரீன்

ஜடேஜா மற்றும் சாம் கரண் விட்டுச்சென்ற ஆல்ரவுண்டர் இடத்தை நிரப்ப சரியான வெளிநாட்டு வீரர் கேமரூன் கிரீன் தான். இவர் டாப் ஆர்டரில் அதிரடியாக ஆடுவார், அதேசமயம் பவர்-பிளே மற்றும் மிடில் ஓவர்களில் வேகப்பந்து வீசுவார். இவரை எடுப்பதன் மூலம் அணியின் பேலன்ஸ் சரியாக அமையும்.

இவருக்கு ஏலத்தில் கடும் கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இவர் ரூ.16 முதல் 18 கோடி வரை விலை போகலாம். இவரை எடுத்தால் மற்ற வீரர்களுக்குப் பணம் குறைவாகவே இருக்கும்

வெங்கடேஷ் ஐயர்

கேமரூன் கிரீன் விலை கட்டுப்படியாகவில்லை என்றால், சிஎஸ்கேவின் அடுத்த வாய்ப்பு வெங்கடேஷ் ஐயர் தான். இவர் ஒரு இடது கை பேட்ஸ்மேன். ராகுல், சாம்சன் என வலது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ள சிஎஸ்கே அணிக்கு இவர் ஒரு மாற்றாக அமைவார். பகுதிநேர வேகப்பந்து வீச்சாளராகவும் செயல்படுவார். இவர் ரூ.6 முதல் 8 கோடிக்குள் கிடைக்க வாய்ப்புள்ளது. இவரை எடுத்தால், ஒரு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை ஏலத்தில் எடுக்கப் பணம் மிச்சமிருக்கும்.

லியம் லிவிங்ஸ்டோன்

ஒருவேளை கேமரூன் கிரீன் கைநழுவிப் போனால், சிஎஸ்கேவின் கண்கள் இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் பக்கம் திரும்பும். காரணம், இவர் மிடில் ஆர்டரில் சிக்ஸர் மழை பொழிவார். அதைவிட முக்கியமாக, இவர் ஆஃப் ஸ்பின் மற்றும் லெக் ஸ்பின் என இரண்டு வகையாகவும் பந்துவீசுவார். சேப்பாக்கம் பிட்ச்சில் இது மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும்.

ஒரு தரமான இந்திய ஸ்பின்னர் - பிஷ்னாய் மற்றும் ஒரு மிரட்டலான ஆல்-ரவுண்டர் - கிரீன் அல்லது லிவிங்ஸ்டோன் ஆகியோரைத் ஏலத்தில் வாங்குவதே தோனியின் மாஸ்டர் பிளான். டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடக்கும் ஏலத்தில் சிஎஸ்கே யாரைத் தட்டப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Tuesday, December 9, 2025, 19:22 [IST]
Other articles published on Dec 9, 2025
English summary
CSK Master Plan for IPL 2026 Auction: MS Dhoni's Target List of 3 Key All-Rounders and Spinners
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+