Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படிப்பட்டவர்தான் மிஸ்ஸிங்.. நடராஜனை வைத்து ஸ்கெட்ச் போடும் தோனி.. இப்படி மட்டும் நடந்தா மாஸ்தான்!

சென்னை: இந்திய அணியில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனை ஐபிஎல் 2021ல் எடுக்க சிஎஸ்கே அணி முயலும் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் வருகிறது.

2020ம் வருடம் தமிழக வீரர் நடராஜனுக்கு மிக முக்கியமான வருடம் ஆகும். இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஆடிய நடராஜன் பெரிய அளவில் கவனம் ஈர்த்தார்.

இதன் மூலம் இந்திய அணியில் நெட் பவுலராக தேர்வானார். நெட் பவுலராக உள்ளே வந்த நடராஜன் அணிக்குள் தேர்வு செய்யப்பட்டு ஒருநாள் மற்றும் டி 20போட்டிகளில் தன்னுடைய அசாத்திய பவுலிங் மூலம் திறமையை நிரூபித்துள்ளார்.

 தெரியாது

தெரியாது

யார் என்றே தெரியாமல் இருந்த நடராஜன் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் முக்கியமான பவுலராக உருவெடுத்துள்ளார். ரசிகர்கள் மட்டுமின்றி ஐபிஎல் அணி நிர்வாகிகள் மத்தியிலும் நடராஜன் அதிக கவனம் பெற்றுள்ளார்.

சென்னை

சென்னை

2021பிப்ரவரி மாதம் நடக்க உள்ள ஐபிஎல் ஏலத்தில் நடராஜன் அதிக விலைக்கு எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். இந்த நிலையில் சென்னையில் அணியில் நடராஜன் அதிக விலைக்கு எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. நடராஜனை அணியில் எடுக்க சிஎஸ்கே திட்டமிட்டு வருவதாகவும், இந்திய அணியில் இருக்கும் சில நிர்வாகிகளும் , சிஎஸ்கே நிர்வாகிகளும் இது தொடர்பாக பேசி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

என்ன சொன்னார்கள்

என்ன சொன்னார்கள்

தற்போது சிஎஸ்கே அணையில் ஷரத்துல் தாகூர், சாகர் ஆகிய இரண்டு இந்திய பவுலர்கள் உள்ளனர். இன்னொரு இந்திய பவுலர் தேவை. இந்த இடத்தை நடராஜனை வைத்து தோனி நிரப்ப போகிறார் என்கிறார்கள். தற்போது சிஎஸ்கே அணியில் இருக்கும் பியூஸ் சாவ்லா, ஹர்பஜன், கேதார் ஜாதவ் ஆகியோர் அடுத்த சீசனில் ஆட வாய்ப்பு இல்லை.

ஏலம்

ஏலம்

வாட்சனும் ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் சிஎஸ்கே அணியிடம் அதிக அளவில் பணம் இருக்கும். இந்த பணத்தை வைத்து எந்த வீரரையும் அதிக விலைக்கு எடுக்க முடியும்.

அதிக பணம்

அதிக பணம்

ஒரு வீரருக்கு மட்டும் அதிக பணம் கொடுத்து கூட சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க முடியும். சென்னை அணியின் டெத் பவுலிங் மோசமாக இருப்பதால் நடராஜனை அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே நிர்வாகமும், தோனியும் குறி வைப்பார்கள் என்று கூறப்படுகிறது. நடராஜன் தமிழர் என்பதால் இதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளது என்கிறார்கள்.

Story first published: Thursday, December 10, 2020, 10:56 [IST]
Other articles published on Dec 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+