Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திரில் வெற்றியை பெற்ற சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்தது மும்பை

Recommended Video

சென்னைக்கு பதிலடி... மும்பையிடம் வீழ்ந்தது சென்னை...

புனே: புனேயில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின் 27வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி ஓவர்களில் திரில் வெற்றியை பெற்று வந்த சிஎஸ்கே அணிக்கு கடைசி ஓவரில் சொந்த மண்ணில் திரில் தோல்வியை அளித்தது மும்பை.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் 60 ஆட்டங்கள் கொண்ட இந்த சீசனில் இதுவரை 26 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 5ல் வெற்றி, ஒரு தோல்வியுடன், 10 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் 6 ஆட்டங்களில் ஒரு வெற்றி, 5 தோல்வியுடன் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் கடைசி இடத்தில் உள்ளது.

சீசனின் 27வது ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் புனேயில் இன்று நடக்கும் ஆட்டத்தில் மோதின. இரு அணிகளும் இரண்டாவது முறையாக இந்த சீசனில் சந்திக்கின்றன. சீசனின் முதல் ஆட்டத்தில் மும்பை 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சிஎஸ்கே ஒரு கட்டத்தில் தோல்வியின் விளம்புக்கு சென்றது. அப்போது பிராவோ 30 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 68 ரன்கள் எடுத்து. சிஎஸ்கேவின் வெற்றியை உறுதி செய்தார்.

அந்த ஆட்டத்தைப் போலவே, இதுவரை சிஎஸ்கே விளையாடிய 6 ஆட்டங்களிலும் பரபரப்புக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருந்தது. கேப்டனாக தோனி இன்று தனது 150வது ஆட்டத்தில் விளையாடினார்.

புனேயில் இரண்டாவது ஆட்டம்

புனேயில் இரண்டாவது ஆட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் போராட்டங்களால், சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருந்த ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன. புதிதாக தத்தெடுத்த சொந்த மைதானமான புனேவில் சிஎஸ்கேவுக்கு இது இரண்டாவது ஆட்டமாகும். முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானை வென்றது.

சிஎஸ்கே கொடி பறக்கும்

சிஎஸ்கே கொடி பறக்கும்

இந்த சீசனில் மிகவும் வலுவான மற்றும் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே உள்ளது. அதே நேரத்தில் நடப்பு சாம்பியன் மும்பை, தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. முதல் ஆட்டத்தைப் போலவே, இன்றைய ஆட்டத்திலும் சிஎஸ்கேவின் கொடி பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சிஎஸ்கே அதிரடி ரன்குவிப்பு

சிஎஸ்கே அதிரடி ரன்குவிப்பு

டாஸை வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. வாட்சன் 12, ராயுடு 46, தோனி 26, பிராவோ ரன் எடுக்காமல், சாம் பில்லிங்ஸ் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 75 ரன்கள் எடுத்தார். குருணால் பாண்டயா, மெக்ளினாகன் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

மீண்டும் திரில் வெற்றி

மீண்டும் திரில் வெற்றி

170 ரன்கள் வெற்றி இலக்குடன் மும்பை பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. 19.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 173 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வென்றது. சூர்யகுமார் 44, லூயிஸ் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா 56 ரன்களும், ஹார்திக் பாண்டயா 16 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

நடப்பு சாம்பியனான மும்பைக்கு இது இந்த சீசனில் இரண்டாவது வெற்றியாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.

Story first published: Sunday, April 29, 2018, 0:06 [IST]
Other articles published on Apr 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+