சிஎஸ்கே அணிக்கு வரும் அதிரடி இலங்கை வீரர்.. தோனி போட்ட ஸ்கெட்ச்.. விரைவில் அறிவிப்பு
சென்னை : ஐபிஎல் 16 வது சீசன் தொடருக்கு தயாராகும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது இறுதி கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே சென்னை வந்துள்ள தோனி தன்னுடைய பயிற்சியை தொடங்கிவிட்டார்.
ரஹானே, ராயுடு உள்ளிட்ட வீரர்களும் தோனியுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸும் ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது .
ஆனால் சென்னை அணியில் உள்ள நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜெமிசன் காயம் காரணமாக நடப்பு தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி ஆல்ரவுண்டர்
இந்த நிலையில் ஜேமிசனுக்கு மாற்று வீரன் யார் என்று தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷனக்கா பேட்டிங்கில் அபாரமாக விளையாட கூடியவர். பந்துவீச்சிலும் ஓரளவுக்கு ரன்களை கட்டுப்படுத்தக் கூடியவர். சணக்கா அணிக்குள் வந்தால் நிச்சயம் அணியின் பேட்டிங் வலுபெறும். சணக்கா தன்னுடைய திறமையை பலமுறை நிரூபித்தும் கடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் எந்த அணியும் அவரை தேர்வு செய்யவில்லை.

சிக்கல்
இது பெரும் அதிர்ச்சியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் சனக்காவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கொண்டுவர தோனி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ள நிலையில், ஒரே ஒரு சிக்கலுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யோசித்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இலங்கை வீரர்கள் யாரும் ஐபிஎல் தொடரில் சென்னையில் விளையாட கூடாது என உத்தரவிட்டிருந்தார்.

3 ஆண்டுகள்
அப்படி விளையாடும் பட்சத்தில் அது தமிழர்களின் உணர்வை பாதிக்கும் வகையில் இருக்கும் எனவும் அவர் விமர்சித்து இருந்தார். இதனால் சென்னையில் போட்டிகள் நடைபெறும் போது இலங்கை சேர்ந்த எந்த ஒரு வீரர்கள் நிர்வாகிகளும் பங்கேற்க மாட்டார்கள். தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது.

2 வீரர்கள்
சிஎஸ்கே அணியிலும் இரண்டு இலங்கை வீரர்கள் உள்ளனர். அவர்களை களம் இறக்குவதே தற்போது பிரச்சினையாகும் என்ற அச்சம் சிஎஸ்கே அணி நிர்வாகிகளிடம் உள்ளது. இந்த வேலையில் மூன்றாவது ஒரு வீரராக சனக்காவை சேர்த்தால் ஒருவேளை சென்னையில் இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டால் அது பின்னடைவை ஏற்படுத்தும் என்ற சந்தேகம் மட்டும் உள்ளது.


Click it and Unblock the Notifications