Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ருதுராஜுக்கு சிஎஸ்கே டாட்டா பைபை? சஞ்சு சாம்சனை கொண்டு வருவதே அதுக்குத்தானா.. உண்மை என்ன?

சென்னை: ஐபிஎல் அரங்கில் கடந்த சில நாட்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை தங்கள் அணிக்கு மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதற்கான முயற்சிகள் நடந்து வருவது உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டை நீக்குவதற்காக தான் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வரவழைக்க உள்ளதாக ஒரு தகவல் பேசப்படுகிறது.

2025 ஐபிஎல் தொடரின் முதல் ஐந்து போட்டிகள் வரை ருதுராஜ் கெய்க்வாட் தான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டார். அதில் சிஎஸ்கே அணி நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதை அடுத்து அவருக்கு முழங்கையில் ஏற்பட்ட காயத்தை சுட்டிக் காட்டி தொடரில் இருந்தே நீக்கப்பட்டார். பின்னர் தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு மீதமிருந்த போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொடுத்தார்.

Chennai super kings Ruturaj Gaikwad Sanju Samson IPL

அப்போதே சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கும், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. எனினும், அதற்கான நம்பத்தகுந்த ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி "ஐபிஎல் டிரேட்" முறை மூலம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்துக்கும் சஞ்சு சாம்சனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தான் அவர் வேறு அணிக்கு மாற விரும்பினார். அதை பயன்படுத்தி சிஎஸ்கே அணி அவரை வாங்க முயற்சிக்கிறது. தோனிக்கு மாற்றாக தான் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்க முயற்சிக்கிறது.

தோனிக்கு தற்போது 43 வயது ஆகிறது. அவரால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது. இந்த நிலையில் அவருக்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சிஎஸ்கே அணிக்கு தேவை. அதுவும் நல்ல அனுபவம் வாய்ந்த ஒருவராக இருந்தால் சரியாக இருக்கும் என சிஎஸ்கே அணி தேடி வந்த போது தான் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விட்டு வெளியேற விரும்பினார்.

எனவே, சிஎஸ்கே அணி ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டன் பதவியில் இருந்து நீக்கத்தான் சஞ்சு சாம்சனை வாங்கப் போகிறது என்ற தகவலில் உண்மை இருக்காது.

அதே சமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்கு விட்டுக் கொடுக்கும் போது நிச்சயம் சிஎஸ்கே அணியின் சிறந்த வீரர்களை தங்கள் அணிக்கு அணி மாற்றம் செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கலாம். ஒருவேளை அந்த அணி ருதுராஜ் கெய்க்வாட்டை தங்கள் அணிக்கு கேட்கலாம். கேப்டனுக்கு, கேப்டன் மாற்றம் என்கிற ரீதியில் இந்த மாற்றம் நடக்கவும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Wednesday, July 2, 2025, 13:45 [IST]
Other articles published on Jul 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+