கூகுள் சர்ச்சில் அதிகமாக தேடப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்!
டெல்லி: கூகுள் சர்ச்சில் அதிகமாக தேடப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான்.
ஐபிஎல் தொடர்பாக எவையெல்லாம் அதிக அளவில் சர்ச் செய்யப்பட்டன என்பது குறித்த ஒரு விவரத்தை கூகுள் சர்ச் வெளியிட்டுள்ளது.
அதில் அதிக அளவில் தேடப்பட்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது.

ஆர்வம் குறைவு
கடந்த காலங்களை விட இந்த ஆண்டு மக்கள் மத்தியில் ஐபிஎல் குறித்த ஆர்வம் குறைந்துள்ளதாம்.

மேட்ச் பிக்ஸிங் - தேர்தல் கலாட்டா
மேட்ச் பிக்ஸிங் சர்ச்சைகள், லோக்சபா தேர்தல் களேபரம் ஆகியவை காரணமாக ஐபிஎல் பக்கம் மக்கள் அதிகம் திரும்பாமல் உள்ளனராம்.

அதிகம் தேடிய வங்க மக்கள்
நாட்டிலேயே ஐபிஎல் குறித்த அதிக அளவிலான தேடலை மேற்கு வங்க மக்கள்தான் நடத்தியுள்ளனர். கடந்த முறை முதலிடம் பிடித்த கர்நாடகா இந்த முறை 5வது இடத்திற்குப் போய் விட்டது.

சென்னைதான் ராஜா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த தேடல்கள்தான் அதிக அளவில் இருந்துள்ளன. 2வது இடத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெறுகிறது.

3வது இடத்தில் மும்பை
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த வரிசையில் 3வது இடம் கிடைத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகியவை பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications