Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'கிங்'குமா.. முதலிடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுமா.. !

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் 10 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் 10 புள்ளிகளுடன் இருந்தாலும் கூட ரன் ரேட் அடிப்படையில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3வது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4வது இடத்திலும் உள்ளன.

5வது இடத்தில் பெங்களூரும், 6வது இடத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தும் உள்ளன. 7வது இடம் டெல்லி டேர்டெவில்ஸுக்கு. கடைசி இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உட்கார்ந்திருக்கிறது.

எமிரேட்ஸில் 20 போட்டிகள்

எமிரேட்ஸில் 20 போட்டிகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 20 போட்டிகளை ஐபிஎல் நடத்தியது. இதில் எல்லாவற்றிலும் வென்ற அணியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் உருவெடுத்தது. எதிலுமே வெல்லாத அணி என்ற அவப் பெயரை நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் பெற்றது.

இந்தியப் போட்டிகள் தொடக்கம்

இந்தியப் போட்டிகள் தொடக்கம்

இந்தநிலையில் இந்தியாவில் அடுத்த கட்ட ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்தியாவில் மொத்தம் 36 போட்டிகள் நடைபெறவுள்ளன.

பஞ்சாபுக்கு முதல் தோல்வி

பஞ்சாபுக்கு முதல் தோல்வி

இந்திய பயணத்தை பஞ்சாப் அணி தோல்வியோடு தொடங்கியுள்ளது. அதேசமயம், தொடர் தோல்விக்கு மும்பை இந்தியன்ஸ் முற்றுப்புள்ளி வைத்து முதல் வெற்றியை சுவைத்துள்ளது.

முதலிடத்தைப் பிடித்த சென்னை

முதலிடத்தைப் பிடித்த சென்னை

இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2வது இடத்திலிருந்து முதலிடத்திற்கு முன்னேறியது. அந்த அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன் நெட் ரன் ரேட் 1.190 ஆகும்.

2வது இடத்தில் பஞ்சாப்

2வது இடத்தில் பஞ்சாப்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சென்னையைப் போலவே 5 வெற்றி, ஒரு தோல்வி என்று 10 புள்ளிகளுடன் இருந்தாலும் ரன் ரேட் 1.040 என்று இருப்பதால் 2வது இடத்தில் இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது.

4 புள்ளிகளுடன் பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி

4 புள்ளிகளுடன் பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி

தலா 4 புள்ளிகளுடன் பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி ஆகிய அணிகள் உள்ளன.

கடைசி இடத்தில் நீடிக்கும் மும்பை

கடைசி இடத்தில் நீடிக்கும் மும்பை

கடைசி இடத்தில் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி நீடிக்கிறது.

Story first published: Sunday, May 4, 2014, 15:07 [IST]
Other articles published on May 4, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+