Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு எல்லாம் இடமில்லை.. சிஎஸ்கேவை சீண்டிய தினேஷ் கார்த்திக்.. ஆல் டைம் பிளேயிங் 11இல் இடமில்லை

சென்னை: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை சீண்டும் வகையில் ஒரு விஷயத்தை செய்துள்ளார். சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் ஆகச் சிறந்த இந்திய அணியின் 11 வீரர்கள் கொண்ட அணியின் பட்டியல் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. இதை அடுத்து தோனியின் ரசிகர்கள் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சமூக வலை தளங்களில் அவரை விளாசி வருகின்றனர். அந்த அவர் வெளியிட்டுள்ள அந்த பிளேயிங் லெவனில் வீரேந்தர் சேவாக் மற்றும் ரோஹித் சர்மா துவக்க வீரர்களாக இடம் பெற்றுள்ளனர்.

IPL 2025 chennai super kings MS Dhoni 2025

அடுத்த பேட்டிங் வரிசையில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். அடுத்து ஐந்து பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளே, பும்ரா மற்றும் ஜாகிர் கான் இடம் பெற்று உள்ளனர்.

இதில் விக்கெட் கீப்பராக அவர் யாரையும் குறிப்பிட்டு சேர்க்கவில்லை. அதன் மூலம், ராகுல் டிராவிட் அணியின் விக்கெட் கீப்பர் என நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதில் தோனி இடம் பெறவில்லை. இந்த பிளேயிங் லெவன் டெஸ்ட் போட்டிக்கானது இல்லை எனும் நிலையில் நிச்சயமாக இதில் தோனியின் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும் என தோனியின் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் விமர்சித்த வருகின்றனர்.

மேலும், தினேஷ் கார்த்திக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பயணித்து வருகிறார். முன்னதாக அந்த அணியில் இடம் பெற்று ஆடிய அவர், ஓய்வை அறிவித்த பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதனால், சிஎஸ்கே ரசிகர்களை சீண்டும் வகையில் இந்த விஷயத்தை செய்து இருக்கிறார் எனவும் சில ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

தினேஷ் கார்த்திக் வெளியிட்டு இருக்கும் ஆல் டைம் பிளேயிங் 11 -

வீரேந்தர் சேவாக், ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளே, பும்ரா மற்றும் ஜாகிர் கான்

Story first published: Friday, August 16, 2024, 8:17 [IST]
Other articles published on Aug 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+