Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி ஆடப் போகும் முதல் போட்டி இதுதான்.. எதிரி அணிக்கு எதிராக ஆட திட்டம்.. சிஎஸ்கே-வுக்கு ஜாக்பாட்

சென்னை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக இந்த சீசனின் முதல் 5 போட்டிகளில் விளையாடாத 'தல' தோனி, வரும் ஏப்ரல் 23-ம் தேதி சிஎஸ்கே-விம் எதிரி அணியாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் சென்னை ரசிகர்கள் ஏங்கிய ஒரு விஷயம் தோனியின் வருகைதான். தசைநார் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த தோனி, முதல் 5 போட்டிகளில் விளையாடவில்லை. வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள சென்னை அணியின் 6-வது லீக் போட்டியிலும் தோனி விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. அவர் தற்போது முழு உடல் தகுதியை எட்டும் நிலையில் இருந்தாலும், நிர்வாகம் அவரை அவசரப்படுத்த விரும்பவில்லை.

CSK MS Dhoni to Return Against Mumbai Indians Double Jackpot for CSK Fans as Thala Returns to Action

மும்பையுடன் மோதல்

இந்நிலையில், ஏப்ரல் 23-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள 'எல் கிளாசிகோ' என்று அழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான மோதலில் தோனி பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. பரம எதிரிகளான மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டி என்றாலே மைதானத்தில் அனல் பறக்கும். அந்தப் போட்டியில் தோனி மீண்டும் அணிக்குத் திரும்புவது ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டமாக அமையப்போகிறது.

தோனியின் சாதனை

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோனிக்கு சிறப்பான சாதனைகள் உள்ளன. இதுவரை மும்பைக்கு எதிராக 44 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 772 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 3 அரைசதங்கள் அடங்கும். மும்பைக்கு எதிராக அவரது சராசரி 35.09 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 130.62 ஆக உள்ளது. கடந்த ஆண்டு மும்பைக்கு எதிரான போட்டியில் அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், அவரது வருகையே எதிரணிக்கு ஒருவிதமான மனரீதியான அழுத்தத்தைக் கொடுக்கும் என்பது நிதர்சனம்.

சஞ்சு சாம்சன் நிலை என்ன?

தோனி இல்லாத முதல் 5 போட்டிகளில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராகச் சிறப்பாகச் செயல்பட்டார். இந்த சீசனில் இதுவரை 185 ரன்கள் எடுத்துள்ள சஞ்சு சாம்சன் தான் சென்னை அணியின் டாப் ஸ்கோரராக உள்ளார். குறிப்பாக டெல்லிக்கு எதிராக 115 ரன்கள் குவித்து சென்னைக்கு முதல் வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

தற்போது தோனி அணிக்குள் திரும்பும் பட்சத்தில், அவரே விக்கெட் கீப்பிங் பொறுப்பைக் கவனிப்பார். இதனால் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் சுமையின்றி ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்டராக மட்டும் விளையாடுவார். 2026 டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சனும், அனுபவ நாயகன் தோனியும் இணைந்து விளையாடுவதைப் பார்க்க ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Story first published: Thursday, April 16, 2026, 8:09 [IST]
Other articles published on Apr 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+