Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னா, ஹர்பஜன் இல்லை.. எதைப் பற்றியும் கவலைப்படாத கேப்டன் கூல் தோனி.. பக்கத்தில் வாட்டோ.. செம வைரல்

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பல சர்ச்சைகள் வெளியான வண்ணம் இருக்கும் நிலையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் கூலாக இருக்கிறார் தோனி.

Recommended Video

IPL 2020 Schedule-வெளியாவதில் தாமதம் ஏன்? | Oneindia Tamil

சிஎஸ்கே அணியின் ட்விட்டர் பக்கத்தில் தோனி காலை உணவருந்தும் காட்சி புகைப்படமாக வெளியிடப்பட்டது.

அதில் தான் தோனி கூலாக இருக்கும் காட்சியைக் கண்டு ரசிகர்கள் குஷியாகி இருக்கிறார்கள்.

சிஎஸ்கே குடும்பம்

சிஎஸ்கே குடும்பம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரே குடும்பமாக இருக்கும் அணி என்ற பெயர் பெற்றது. குறிப்பாக 2016, 2017ஆம் சீசனில் தடை செய்யப்பட்டு பின் மீண்டும் 2018 சீசனில் அந்த அணி களம் கண்ட போது ஏலத்தில் 2015இல் அணியில் இருந்த பல வீரர்களை தேடித் தேடி வாங்கியது.

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

அப்போது முதல் சிஎஸ்கே அணி வீரர்கள் அதிக நட்புடன் இருந்தனர். ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் கொரோனா வைரஸ் அதற்கு வேட்டு வைத்துள்ளது. துபாயில் உள்ள சிஎஸ்கே அணியின் முகாமில் இரு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

மொத்தம் 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதை அடுத்து சுரேஷ் ரெய்னா அச்சத்தால் இந்தியா திரும்பினார். மறுபுறம் சிஎஸ்கே அணி வீரர்கள் ஐபிஎல் தொடருக்கான பயிற்சி துவங்க முடியாமல் மீண்டும் குவாரன்டைனில் இருந்தனர்.

ஹர்பஜன் சிங் விலகல்

ஹர்பஜன் சிங் விலகல்

ரெய்னாவை தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவர் தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக கூறினாலும், அவரும் கொரோனா வைரஸ் அச்சத்தால் தான் விலகுவதாக கூறப்படுகிறது. இரண்டு அனுபவ வீரர்களை அடுத்தடுத்து இழந்துள்ளது சிஎஸ்கே.

தோனி மனநிலை

தோனி மனநிலை

இந்த நிலையில் கேப்டன் தோனி மற்றும் சிஎஸ்கே அணி என்ன மனநிலையில் இருப்பார்கள் என்பது பற்றி ரசிகர்கள் பல்வேறு விதமாக பேசி வந்தனர். இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் ட்விட்டர் பக்கத்தில் தோனியின் சமீபத்திய புகைப்படம் வெளியிடப்பட்டது.

சிஎஸ்கே பயிற்சி

சிஎஸ்கே பயிற்சி

பாதிப்புக்கு உள்ளான 13 பேரை தவிர மற்ற வீரர்களுக்கு அடுத்தடுத்த பரிசோதனைகளில் பாதிப்பு இல்லை என்பது உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை முதல் சிஎஸ்கே அணி பயிற்சி செய்யத் துவங்கியது. அதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது.

தோனி புன்னகை

தோனி புன்னகை

அந்த புகைப்படத்தில் தோனி மற்றும் ஷேன் வாட்சன் அருகருகே அமர்ந்து உணவருந்தி வருகின்றனர். தோனி புன்னகையுடன் காட்சி அளிக்கிறார். வாட்சன் அவரை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை தான் சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது.

ரசிகர்கள் நிம்மதி

ரசிகர்கள் நிம்மதி

சிஎஸ்கே ரசிகர்கள் இந்த புகைப்படத்தில் தோனி சிரித்துக் கொண்டு இருப்பதை கண்டு நிம்மதி அடைந்துள்ளனர். இதற்கு லைக்ஸ் கொடுத்து வைரல் ஆக்கி வருகின்றனர். சிஎஸ்கே அணி இயல்பு நிலையில் இருப்பதையே இந்த புகைப்படம் காட்டுகிறது.

Story first published: Friday, September 4, 2020, 17:47 [IST]
Other articles published on Sep 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+