Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேற டீமா இருந்தா என்னை எப்பவோ தூக்கி எறிஞ்சுருப்பாங்க.. ஆனா தோனி.. உருகிய ஷேன் வாட்சன்

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனுபவ துவக்க வீரர் ஷேன் வாட்சன் கேப்டன் தோனியை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

Recommended Video

தோனியை புகழ்ந்து தள்ளிய CSK அணியின் அனுபவ துவக்க வீரர் ஷேன் வாட்சன் கேப்டன்

ஐபிஎல் தொடரிலேயே சிஎஸ்கே அணியில் ஆடுவது தான் தன் அதிர்ஷ்டம் எனவும் அவர் கூறி இருக்கிறார்.

தான் சரியாக ஆடாத போது கூட தன் மீது நம்பிக்கை வைத்த சம்பவத்தை குறிப்பிட்டு தோனியை பாராட்டி உள்ளார் வாட்சன்.

ஷேன் வாட்சன் - சிஎஸ்கே

ஷேன் வாட்சன் - சிஎஸ்கே

2018ஆம் ஆண்டு தான் ஷேன் வாட்சன் சிஎஸ்கே அணிக்கு வந்தார். அந்த ஆண்டு சிஎஸ்கே தடையில் இருந்து மீண்டும் வந்த போது அனுபவ வீரர்களை குறி வைத்து ஏலத்தில் வாங்கியது. அதில் ஒரு முக்கிய வீரர் ஷேன் வாட்சன்.

2018 ஐபிஎல் இறுதி

2018 ஐபிஎல் இறுதி

2018ஆம் ஆண்டு சிறப்பாக ஆடிய ஷேன் வாட்சன் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சதம் அடித்து சிஎஸ்கே ஐபிஎல் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், அடுத்த ஆண்டு அவருக்கு அத்தனை சிறப்பாக அமையவில்லை.

மோசமாக ஆடி வந்தார்

மோசமாக ஆடி வந்தார்

முதல் பத்து இன்னிங்க்ஸ்களில் நிதான துவக்கம், குறைந்த ரன்களில் ஆட்டமிழப்பது என மோசமாக ஆடி வந்தார் வாட்சன். ஆனாலும், தோனி அவரை அணியை விட்டு நீக்கவில்லை. அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை தொடர்ந்து அணியில் நீடிக்க வைத்தார் தோனி.

பார்முக்கு திரும்பினார்

பார்முக்கு திரும்பினார்

அதே 2019 ஐபிஎல் தொடரின் பின் பாதியில் ஷேன் வாட்சன் தன் பார்முக்கு திரும்பினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 53 பந்துகளில் 96 ரன்கள் அடித்து மிரட்டினார். அடுத்து இரண்டாவது தகுதி நீக்க போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 32 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

2019 ஐபிஎல் இறுதிப் போட்டி

2019 ஐபிஎல் இறுதிப் போட்டி

2019 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கூட சிஎஸ்கே அணியை கோப்பை வெல்ல வைக்க கடுமையாக முயன்றார். 59 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். எனினும், அந்தப் போட்டியில் சிஎஸ்கே 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

நம்பிக்கை வைத்த சிஎஸ்கே

நம்பிக்கை வைத்த சிஎஸ்கே

இது பற்றி ஷேன் வாட்சன் கூறுகையில், "2018 சீசன் என் சிறந்த சீசன்களில் ஒன்று. வெறும் இறுதிப் போட்டியை மட்டும் நான் கூறவில்லை. ஆனால், கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி என்னை தொடர்ந்து தக்க வைத்தது." என சிஎஸ்கே அணி தன் மீது வைத்த நம்பிக்கையை பற்றி குறிப்பிட்டார்.

என்னை நீக்கி இருப்பார்கள்

என்னை நீக்கி இருப்பார்கள்

"மற்ற அணிகளில் இருந்திருந்தால், சன்ரைசர்ஸ் போட்டியில் நான் ரன் குவிக்கும் முன்பே என்னை நீக்கி இருப்பார்கள். அடுத்த சில போட்டிகளில் என் சிறந்த ஆட்டம் காத்திருக்கிறது என்பதை அறிந்து அவர்கள் என்னை ஆதரித்தார்கள்." என்றார்.

உலகத்தரமான தலைவர்கள்

உலகத்தரமான தலைவர்கள்

"தம்மிடம் இருக்கும் வீரர்களின் திறனை அறிந்து, உலகத்தரமான தலைவர்கள் மட்டும் தான் அப்படி ஒரே முடிவில் நின்று, அதை நம்பிக்கையுடன் செய்ய முடியும். எனக்கும் கூட அது பெரிய படிப்பினை. ஒருவரை நம்பினால், அவர்களின் திறனை நம்பினால் அவர்கள் ஒரு கட்டத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்." என்றார் ஷேன் வாட்சன்.

தோனியை ரசித்து இருக்கிறேன்

தோனியை ரசித்து இருக்கிறேன்

"சிஎஸ்கே என் மீது முழு நம்பிக்கை வைத்து இருந்தது. எதிர்த்து ஆடுவதற்கு கூட அது அருமையான அணி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆடிய போது நான் ஸ்டீபன் பிளெம்மிங் மற்றும் தோனியை ரசித்து இருக்கிறேன். களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அவரின் செயல்பாடுகளை ரசித்துள்ளேன்" என்றார் வாட்சன்.

சிறப்பான அனுபவம்

சிறப்பான அனுபவம்

"சிஎஸ்கே அணிக்காக ஆடுவதும், அந்த அணி தலை முதல் கால் வரை சிறப்பாக செயல்படுவதையும் உணர்வது சிறப்பான அனுபவம். ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக எனக்கு கிடைத்துள்ள கேரியரால், எல்லோரையும் நன்றாக பார்த்துக் கொள்ளும் ஒரு அணிக்காக ஆடுவதால் நான் அதிர்ஷ்டமானவனாக உணர்கிறேன்" என சிஎஸ்கே அணியை பாராட்டித் தள்ளினார் ஷேன் வாட்சன்.

Story first published: Thursday, September 10, 2020, 20:36 [IST]
Other articles published on Sep 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+