என்னது.. ரசலா..? அவரு எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது… போட்டு தாக்கும் தோனி அணி
Recommended Video

சென்னை: கொல்கத்தா அதிரடி வீரர் ரசல் குறித்து கவலைப்பட மாட்டோம் என்று சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் கூறியுள்ளார்.
2019 ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு தொடரில் இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றி மற்றும் ஒரு தோல்வியை கண்டுள்ளன. புள்ளிப்பட்டிலியல் கொல்கத்தா முதலிடத்திலும், சென்னை 2-வது இடத்திலும் உள்ளது.

தோனி தான் பலம்
சென்னை அணியின் மிகப்பெரிய பலமே தோனி தான். நடப்பு சீசனில் 156 ரன்கள் அடித்து முன்னிலை வகிக்கிறார். டு பிளெசிஸ் அதிரடியாக களத்தில் இருக்கிறார். பஞ்சாப் அணிக்கு எதிராக 38 பந்துகளில் 54 ரன்கள் விளாசியதை மறக்க முடியாது.

அருமையான பார்ம்
சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடுவின் பார்ம் தான் கவலை தருகிறது. கொல்கத்தா அணியில் கிறிஸ் லின், சுனில் நரைன், உத்தப்பா, ரானா ஆகியோர் சூப்பராக ஆடி வருகின்றனர். ரசல் போட்டியின் தன்மையை மாற்றக்கூடும்.

எத்தனை முறை?
ஐபிஎல் தொடரில் இதுவரை 18 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 11 முறை சென்னையும், 7 முறை கொல்கத்தாவும் வென்றுள்ளன.

காத்திருக்கும் ரசிகர்கள்
சேப்பாக்கத்தை பொறுத்த வரை 8 போட்டிகளில் சென்னை 6லும், கொல்கத்தா 2லும் வெற்றி பெற்றன. இரு அணிகளும் சம பலத்துடன் மோதும் என்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இந்த போட்டியை எதிர்நோக்கி உள்ளனர்.

கவலையில்லை
இந்நிலையில் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை அணியின் பயிற்சியாளர் பிளம்மிங், ரசலை பற்றி அதிகம் கவலைப்பட மாட்டோம் என்று கூறினார்.

சிறந்த வீரர்கள்
கிறிஸ் லின்,தினேஷ் கார்த்திக், உத்தப்பா போன்ற அருமையான வீரர்கள் உள்ளனர். அவர்களின் ஆட்டத்தை தான் உற்றுநோக்குவோம். சிறப்பாக விளையாடினாலும் ரசலை கண்டுகொள்ள மாட்டோம் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications