Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் சிஎஸ்கே பவுலர் சேர்ப்பு.. 3வது ஒருநாள் போட்டியில் பிரசித் கிருஷ்ணா நீக்கம்

சண்டிகர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டார். அவருக்கு மாற்று வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் இந்திய அணியில் அதிரடியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

பிரசித் கிருஷ்ணாவுக்கு தொடைப்பகுதியில் காயம் குவஹாட்டியில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியின் போது பந்துவீசிய பிரசித் கிருஷ்ணாவுக்கு தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டது. இதனால் அந்த போட்டியில் அவரால் 5 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது. அதில் அவர் 45 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணாவின் காயம் தீவிரமடைந்துள்ளதால், அக்டோபர் 3 அன்று நியூ சண்டிகரில் நடைபெற உள்ள 3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

CSK Pacer Anshul Kamboj Replaces Injured Prasidh Krishna in India s Squad for 3rd ODI vs West Indies

இந்தியா ஏ அணியில் இருந்து அவசர அழைப்பு

புதுச்சேரியில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் அன்ஷுல் கம்போஜ் விளையாடி வந்தார். முதல் இன்னிங்ஸில் 17.3 ஓவர்கள் வீசி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். இந்நிலையில் மூத்த இந்திய ஒருநாள் அணியில் இருந்து அவசர அழைப்பு வந்ததால், இந்தியா ஏ போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறி அவர் சண்டிகர் விரைந்துள்ளார்.

2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக அன்ஷுல் கம்போஜ் திகழ்ந்தார். கடந்த 2025 ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் விளையாடி சர்வதேச அளவில் அறிமுகமான இவர், இதுவரை ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகவில்லை. புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதோடு கீழ்வரிசையில் பேட்டிங் செய்யும் திறமையும் இவருக்கு உண்டு.

பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா?

3வது ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க முகமது சிராஜ் மற்றும் அன்ஷுல் கம்போஜ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத சிராஜிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம். அதேநேரத்தில், அறிமுக போட்டியில் 84 ரன்களை வாரி வழங்கிய இளம் வீரர் ஆகிப் நபிக்கு ஓய்வளிக்க நிர்வாகம் முடிவு செய்தால், அன்ஷுல் கம்போஜ் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் ஆட வாய்ப்புள்ளது.

"இதுக்கு பேரு கிரிக்கெட்டே இல்ல வெறும்..".. IND vs WI போட்டிக்கு பின் பொங்கி எழுந்த கவுதம் கம்பீர்

3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி விவரம்: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல், நமன் திர், ரவீந்திர ஜடேஜா, நிதீஷ் குமார் ரெட்டி, குர்னூர் பிரார், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ், முகமது சிராஜ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆகிப் நபி, துருவ் ஜுரெல்.

Story first published: Thursday, October 1, 2026, 15:05 [IST]
Other articles published on Oct 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+