Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேக்கு வரப்போகும் கடைக்குட்டி சிங்கம்.. நெருப்பு மாதிரி பேட்டிங்.. அல்வா மாதிரி தூக்கப்போறாங்க

மும்பை: ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறுவது போல் தெரியலாம். ஆனால் அதற்கான காரணத்தை கண்டு அறிந்து, இப்போதே மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மட்டுமல்ல, அதற்கான வேலையை மும்பை இந்தியன்சும் இறங்கிவிட்டது. ஐபிஎல் ஏலம் அடுத்த ஆண்டும் நடைபெறும்.

அது வெறும் குட்டி ஏலமாக இருக்கலாம். ஆனால் ஏலத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து டிராஃப்ட் முறையில் வீரர்கள் தேர்வு நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

20 கோடியில் பிளான்

20 கோடியில் பிளான்

அப்படி டிராஃப்ட் முறையில் வீரர்கள் தேர்வு நடந்தால், அதில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணியின் கை மட்டும் தான் ஓங்கும். சிஎஸ்கே அணியில் பிராவோ, தோனி ஆகியோர் அடுத்த ஆண்டு விளையாடுவது சந்தேகமே. அப்படி இருவரும் விலகினால் சிஎஸ்கே கையில் 20 கோடி இருக்கும். தோனி இருந்தாலும் கூட, சிஎஸ்கே சிவம் துபே போன்ற வீரர்களை சிஎஸ்கே விட்டு கொடுத்து பணத்தை தயார் படுத்தும்.

வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்

வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்

தற்போது சிஎஸ்கே அணிக்கு இருக்கும் முக்கிய பிரச்சினையே ஒரு நல்ல வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது தான். இதே போன்று நடுவரிசையில் பேட்டிங்கில் அதிரடி காட்டவும் மற்ற அணி போல் ஒரு இளம் வீரர் தேவை. அதற்கு சிஎஸ்கே வைத்துள்ள பிளான் தான் இந்த கடைக்குட்டி சிங்கம்.

சாம் கரண்

சாம் கரண்

அது வேறு யாரும் இல்ல, நம்ம சாம் கரண் தான். காயம் காரணமாக கடந்த 2 சீசன்களாக ஐபிஎலில் விளையாடாத சாம் கரண், தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 80,33,64,71 ஆகியவை சாம் கரண் அடித்த ஸ்கோர் ஆகும். பந்துவீச்சில் தற்போது மெல்ல மெல்ல பழைய ஃபார்ம்க்கு வருகிறார்.இதனால் அடுத்த ஆண்டு ஏலத்திலோ அல்லது டிராஃப்டிலோ சாம் கரணை சிஎஸ்கே தூக்கிவிடும்.

தினேஷ் பானா

தினேஷ் பானா

இதே போன்று, ஒரு வேலை தோனி இல்லை என்றால், அந்த இடத்திற்கு வரப்போவது தினேஷ் பானா தான். அவர் தற்போதே சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்று இருந்தார். அடுத்த ஆண்டு ஹங்கர்கேகருக்கும் வாய்ப்பு கிடைக்கும். நடுவரிசையில் இந்த மூன்று பேரும் விளையாடினால் எப்படி இருக்கும். பார்ப்போம், காலம் எப்படி பதில் சொல்கிறது என்று..

Story first published: Friday, May 6, 2022, 23:08 [IST]
Other articles published on May 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+