Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் திரில் வெற்றி... டெல்லியை 13 ரன்களில் வீழ்த்தியது

Recommended Video

இறுதிநேர பரபரப்பு... மீண்டும் வென்றது சென்னை

புனே: புனேயில் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் ஷேன் வாட்சன், தோனியின் அதிரடி அரை சதங்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 13 ரன்களில் மற்றொரு திரில் வெற்றியை பெற்றது. 212 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடைசி வரை போராடியது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 29 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 ஆட்டங்களில் 6 வெற்றியுடன் 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ஆட்டங்களில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை 7 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வென்றுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

தொடர்ந்து தோல்வி அடைந்து வந்ததால், டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் கம்பீர் விலகினார். புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்றுள்ளார்.

அசைக்க முடியாத கேப்டன்

அசைக்க முடியாத கேப்டன்

மும்பைக்கு எதிராக நேற்று முன் தினம் நடந்த ஆட்டம் சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு, கேப்டனாக 150வது போட்டியாகும். அதே நேரத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 27ம் தேதி நடந்த ஆட்டம், ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டனாக முதல் ஆட்டமாகும்.

டெல்லி டாஸ் வென்றது

டெல்லி டாஸ் வென்றது

மீண்டும் வெற்றியின் பாதைக்கு திரும்புவதற்கு சிஎஸ்கே அணியும், மற்றொரு வெற்றிக்காக டெல்லி அணியும் இன்று மோதுகின்றன. புனேயில் நடக்கும் ஆட்டத்தில் டாஸை வென்ற டெல்லி பவுலிங்கை தேர்வு செய்தது.

புனேயில் சிக்சர் மழை

புனேயில் சிக்சர் மழை

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்துள்ளது. டுபிளாசி 33, ரெய்னா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். ஷேன் வாட்சன் 7 சிக்சர்களுடன் 78 ரன்களும், ராயுடு 41 ரன்களும் எடுத்தனர். தோனி 22 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள் 14 சிக்சர்களை விளாசினர்.

வெற்றி யாருக்கு

வெற்றி யாருக்கு

20 ஓவர்களில் 212 ரன்கள் இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி களமிறங்கியது. காலின் முன்ரோ 26, பிருத்வி ஷா 9, ஸ்ரேயாஸ் ஐயர் 13, கிளென் மேக்ஸ்வெல் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். முக்கியமான கட்டத்தில் ரிஷப் பந்த் 45 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். விஜய் சங்கர் 31 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை போராடினார்.

கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. லுங்கி நிகாடி வீசிய அந்த ஓவரில், 4 பந்துகளில் 20 ரன்கள், 3 பந்துகளில் 17 ரன்கள் என்று மாறியது. இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு டெல்லி 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே 13 ரன்களில் வென்றது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.

Story first published: Monday, April 30, 2018, 23:46 [IST]
Other articles published on Apr 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+