Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே.வின் குட்டி பாண்டியாவுக்கு சிக்கல்..!! ஏமாற்றிவிட்டதாக பரபரப்பு புகார்.. 3 ஆண்டுகள் தடை?

மும்பை: இந்திய U19 அணியில் இடம்பெற்று, புகழ் பெற்றவர் ராஜவர்த்தன் ஹங்கர்கேகர். அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் வேகப்பந்துவீச்சாளராக அசத்தினார்.

குட்டி ஹர்திக் பாண்டியா என்று ரசிகர்கள் இவரை அழைக்க தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே. ராஜவர்த்தன் ஹங்கர்கேகரை ஒன்றரை கோடிக்கு தேர்ந்த எடுத்தது.

இந்த நிலையில், ஹங்கர்கேகர் மீது பரபரப்பு புகார் ஒன்று தரப்பட்டுள்ளது. இது உறுதியானால் அவருக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும்.

அசத்தல்

அசத்தல்

ராஜவர்த்தனே ஹங்கர்கேகர் மகாராஷ்டிரா அணிக்காக உள்ளூர் போட்டியிலும் விளையாடியுள்ளார். வினோத் மான்காட் கோப்பையில் 8 போட்டிகளில் 19 விக்கெட்டுகளையும், 216 ரன்களையும் விளாசியுள்ளார். ஆசிய கோப்பையில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் அண்டர் 19 உலககோப்பையிலும் இடம்பெற்று அசத்தினார்.

தோனியின் கீழ்

தோனியின் கீழ்

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒருநாள் போட்டியில் இதுவரை 10 ஆட்டத்தில் விளையாடி 10 விக்கெட்டுகளை ஹங்கர்கேகர் எடுத்துள்ளார். தற்போது தோனியின் கீழ் சிறப்பான ஆட்டத்தை ஹங்கர்கேகர் வெளிப்படுத்தி விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

புகார்

புகார்

இந்த நிலையில், ஹங்கர்கேககர் தனது வயதை குறைத்து காட்டி ஏமாற்றிவிட்டதாக மகாராஷ்டிர விளையாட்டுத் துறை ஆணையர் பிசிசிஐக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹங்கர்கேகர் மீதான புகார் நிரூபிக்கபட்டால் அவருக்கு 3 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.

Recommended Video

Why Devon Conway is Good Pick For CSK | IPL 2022 Auction | OneIndia Tamil
சிக்கல்

சிக்கல்

இந்த நிலையில், பிசிசிஐ வீரர்களின் வயதை ஆய்வு செய்த பிறகு தான் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கும். ஆனால் இந்த பணியை மேற்கொள்ள இருந்த தலைமை மருத்துவர் திடீரென்று ராஜினாமா செய்தார். இதனால், பிசிசிஐ வேண்டும் என்றே, ராஜவர்த்தன் ஹங்கர்கேகரை அண்டர் 19 அணியில் சேர்த்து ஏமாற்றியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Story first published: Friday, February 18, 2022, 17:06 [IST]
Other articles published on Feb 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+