For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பட்டையை கிளப்பிய பிராவோ .. சென்னை அணிக்காக பாடல் பாடி அசத்தல்! வைரல் வீடியோ

Recommended Video

IPL 2019 | சென்னை அணிக்காக பாடல் பாடி பிராவோ அசத்தல்! வைரல் வீடியோ

சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, அந்த அணியின் கலக்கல் வீரர் பிராவோ பாடிய பாடல், இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கும் மவுசு எந்த அணிக்கும் கிடையாது. அதுக்கு ஒரே காரணம் தோனி தான். தோனியை தவிர வேறு ஒன்றும் என்று உறுதியாக கூறலாம். அந்த அளவுக்கு அந்த அணியை தோனி புயல் கட்டிப்போட்டிருக்கிறது.

வேற்றுமை பாராது, மற்ற எந்த அணிகளுக்கும் கிடைக்காத மரியாதை,ஈர்ப்பு சென்னை அணிக்கு உள்ளது. சென்னைக்கும், தமிழகத்துக்கும் எப்போதும் நெருக்கமான அணி என்பது கூடுதல் பலம். அதனாலோ என்னவோ அந்த அணிக்கு அதிக ஆதரளவாளர்கள் குவிகின்றனர் என்று சொல்லலாம்.

தோனி அண்ட் கோ

தோனி அண்ட் கோ

அந்த அணியில் கலவையான ரசனை கொண்ட வீரர்கள் பலர் உண்டு. தமிழில் டுவிட் செய்து தமிழ் புலவர் பெயரெடுத்த ஹர்பஜன் சிங், ஜடேஜா என பலர் தோனியின் அன்பு வட்டத்தில் நெருக்கமாக உள்ளனர். அதிலும் பிராவோவின் செல்ல சேட்டைகள் அந்த அணியில் ஏக பிரபலம்.

ரசிகர்களின் சிஎஸ்கே

ரசிகர்களின் சிஎஸ்கே

கிரிக்கெட்டை தாண்டி அவ்வப்போது சுவாரசியமான விளையாட்டுகளில் அந்த அணி களை கட்டும் என்பது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் என்னவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ரசிகர்களிடையே தனி கவனம் பெற்றிருக்கிறது. கேப்டன் தோனி கிரவுண்டில் ஓடிப்பிடித்து விளையாடுவது தொடங்கி, அணியில் அனைவருமே சிறப்பான மறக்க முடியாத தருணங்களை உருவாக்கும் வீரர்களாக வலம் வருகின்றனர்.

விசில் போடு பாடல்

விசில் போடு பாடல்

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாடல்கள் எப்போதுமே முக்கியத்துவம் பெறுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விசில் போடு என்ற ஆரம்ப கால பாடல், அதோடு தோனியை, தல என்றழைத்த பாடல் என எல்லாமே பிரபலமானவை. ரசிகர்களை இன்றளவும் கவர்ந்த பாடல் என்பதால் சென்னை அணியின் டுவிட்டர் பக்கத்தை பாலோ செய்பவர்கள் அதிகம்.

பிராவோவின் சாம்பியன்

பிராவோவின் சாம்பியன்

தற்போது அந்த வகையில் முக்கிய பாடல் ஒன்று டுவிட்டரில் வைரலாகி இருக்கிறது. சிஎஸ்கே வின் முக்கிய வீரரான மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த பிராவோ தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பாடியுள்ள சாம்பியன் பாடல் கலக்கல் ரகம். யெல்லோ டே என்ற பெயரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக உருவாகியிருக்கும் இந்த பாடலை அந்த அணி நிர்வாகம் தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மகிழ்ச்சியில் ரசிகர்கள்

சாம்பியன் பாடல் என்ற அந்த பாடலை பிராவோ அற்புதமாக பாடியிருக்கிறார். மொத்தம் ஒரு நிமிடம் ஓடும் அந்த பாடல்... சென்னை அணி தான் மீண்டும் ஐபிஎல் சாம்பியன் என்பதை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது எனலாம். அணியை உற்சாகப்படுத்தவும், வீரர்களுக்கு ஒரு உற்சாகத்தை அளிக்கும் வகையில் உள்ள அந்த பாடல் தான் தற்போது இணையத்தில் தாறுமாறாக வைரலாகி, சென்னை ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

Story first published: Friday, May 3, 2019, 23:52 [IST]
Other articles published on May 3, 2019
English summary
Csk player bravo’s champion song goes viral in twitter.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+