ஐபிஎல் படம் எங்க ஓடுனாலும்… அங்க நாங்க தான் ஹீரோ…. புரியுதா? ஆரம்பிச்சுட்டாருப்பா இவரு
Recommended Video
சென்னை:ஐபிஎல்ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ என்று சென்னை அணியின் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில் சென்னை, ஹைதராபாத் அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 83 ரன்கள் குவித்தார். ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக வாட்சன், டுபெளிசிஸ் களமிறங்கினர். டுபெளிசிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுபுறம், வாட்சன் அதிரடியாக ஆடி, 53 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அவுட்டானார். 19.5வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றி குறித்து, சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஐபிஎல்ல கிடைக்குற கோப்பைக்கு கௌரவம் இருக்கு அத எடுக்கிற கைகளுக்கு பின்னால சரித்திரம் உண்டு.
ஆனா அந்த கோப்பையை அடிக்கறதுக்கு ஏற்கனவே சென்னைனு ஒரு டீம் இன்னைக்கு பிளே ஆஃப்ல கால் பதிச்சுட்டாங்கனு தெரிய படுத்த வேண்டிய நேரம். ஐபிஎல்-ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications