Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த கல்யாண மாப்பிள்ளை யாரு..?? ரவுசு காட்டும் சென்னை சூப்பர் கிங்சின் கலக்கல் வீடியோ.. செம வைரல்

Recommended Video

CSK viral video | சென்னை சூப்பர் கிங்சின் கலக்கல் வைரல் வீடியோ

சென்னை: சிஎஸ்கே அணியில் கல்யாண மாப்பிள்ளை யார்? என்று ஹர்பஜன் சிங் போட்ட அந்த விளையாட்டான.. காமெடியான புதிர் தான் இப்போ சமூக வலைதளங்களில் வைரல்.

ஐபிஎல் தொடரின் 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கு முந்தைய தொடர் என்பதால் ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய தொடரில் அடி வாங்கிய இந்தியாவும் இந்த தொடரை முக்கியமாக பார்க்கிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் வீரர்களுக்கு உலக கோப்பை அணியில் இடம் பெறலாம்.

ஐபிஎல் திருவிழா

ஐபிஎல் திருவிழா

அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பிசிசிஐயும் சூசகமாக தெரிவித்துள்ளது. ஆக... ஐபிஎல் திருவிழாவுக்காக அனைத்து வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

அமர்க்கள சேட்டைகள்

அமர்க்கள சேட்டைகள்

அதிலும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒவ்வொரு நகர்வுமே ஹைலைட் தான். பயிற்சியின் போது மட்டுமல்லாது... மற்ற நேரங்களிலும் அந்த அணி வீரர்களின் சேட்டைகள் ஒரே அமர்க்களம்.

கல்யாண மாப்பிள்ளை

கல்யாண மாப்பிள்ளை

அந்த வகையில் நம்ம ஹர்பஜன் சிங்கின் கல்யாண மாப்பிள்ளை கலாட்டா போட்டோ வைரலோ... வைரல்தான். ஹர்பஜன் சிங் தமது டுவிட்டரில் புதிர் ஒன்றை போட்டுள்ளார். அதற்கு தான் அப்பப்பா... என்னா உற்சாகம் ரசிகர்களிடம் இருந்து... அந்த போட்டோவில் இருப்பது இதுதான்.

ரசிகர்கள் பதில்

அதில் போட்டோவில் முகம் முழுவதும் பூக்களால் மறைக்கப்பட்ட சென்னை வீரரின் புகைப்படம் உள்ளது. இதற்கு ரசிகர்கள் பதில் அளித்து வருகினர்.

டுவிட்டரில் வெளியீடு

அதே நேரத்தில் இந்த கலட்டாவை வீடியோவாக எடுத்து சென்னை அணியினர் தமது டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.

ஒரு சோபாவில் தோனி, ரெய்னா ஆகியோர் உட்கார்ந்திருக்கின்றனர். அணியின் டிரெஸ்சோடு தோனி ஒரு ஓவர்கோட் போட்டுக் கொண்டு கையில் ஹெல்மெட்டுடன் இருக்கிறார்.

யார் என்று கண்டுபிடியுங்கள்

அவருக்கு அருகில் ரெய்னா... கண்ணாடி, தொப்பியுடன் கால் கால் போட்டுக் கொண்டு ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் இருப்பவர் யார் என்பதை கண்டுபிடியுங்கள் என்பது தான் போட்டியே.

பிராவோ கும்மாளம்

அவரோ... தலையை பூவால் மூடிக் கொண்டு இருக்கிறார். அடுத்து சில விநாடிகளில் அவர் யார் என்பதை காட்டி கும்மாளமிடுகின்றனர். அந்த மாப்பிள்ளை பிராவோ என்று ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று டுவிட் போட்டு வருகின்றனர். இணையத்தில் இப்போது இந்த வீடியோ தான் செம வைரல்.

Story first published: Wednesday, March 20, 2019, 17:11 [IST]
Other articles published on Mar 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+