Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகள் வந்துவிட்டாள்.. உற்சாகமடைந்த சிஎஸ்கே அணியின் சிவம் துபே.. வாழ்த்துகளை பொழியும் ரசிகர்கள்!

மும்பை: சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபேவுக்கு 2வது குழந்தையாக மகள் பிறந்திருப்பதாக சோசியல் மீடியாவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே மகன் இருக்கும் நிலையில், தற்போது மகள் பிறந்திருப்பதால் ரசிகர்கள் சிவம் துபேவுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

சிஎஸ்கே அணிக்காக 3 சீசன்களில் விளையாடியுள்ள சிவம் துபே முதல் சீசனில் 289 ரன்களும், 2வது சீசனில் 418 ரன்களும், கடைசி சீசனில் 396 ரன்களையும் விளாசினார். ஸ்பின்னர்களை வெளுத்து கட்டக் கூடிய பேட்ஸ்மேனான சிவம் துபே, சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் முக்கியமான வீரராக மாறி இருக்கிறார். இதன் காரணமாக இந்திய அணியிலும் சிவம் துபே இடம்பிடித்து அசத்தினார்.

ipl 2025 shivam dube csk

தொடர்ந்து 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய சிவம் துபே இறுதிப்போட்டியில் முக்கிய பங்களிப்பை அளித்து, இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய டி20 அணியின் நிரந்தர வீரர்களில் ஒருவராக மாறியுள்ள சிவம் துபே, அண்மையில் சிஎஸ்கே அணிக்காக ரூ.12 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டார்.

இதன்பின் காயம் காரணமாக வங்கதேச டி20 தொடரில் இருந்து விலகிய சிவம் துபே, சையத் முஷ்டாக் அலி தொடரில் கம்பேக் கொடுத்தார். மும்பை அணிக்காக ஆடிய 5 போட்டிகளில் ஆடிய சிவம் துபே 151 ரன்களையும், விஜய் ஹசாரே தொடரில் 3 போட்டிகளில் ஆடிய அவர், 80 ரன்களையும், ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இந்த நிலையில் இந்த வாரத்தில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சிவம் துபே மும்பை அணி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டார். சிவம் துபேவுக்கும் அவரின் காதலி அஞ்சும் கான் இருவருக்கும் 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதன்பின் அவர்களுக்கு 2022ல் ஆண் குழந்தை பிறந்த நிலையில், அவர் அயான் துபே என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

அயான் துபேவுடன் ஏராளமான ரீல்ஸ்களை பதிவு செய்து சிவம் துபே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் 2வது முறையாக அஞ்சும் கான் கர்ப்பமாக இருந்த நிலையில், இந்த வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தேதி கொடுத்திருக்கின்றனர். இதனால் மும்பை அணியிடம் விடுப்பு கோரிய நிலையில், அவருக்கு உடனடியாக அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிவம் துபே - அஞ்சும் கான் தம்பதியினருக்கு மகள் பிறந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனை சிவம் துபே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜனவரி 3ஆம் தேதி.. எங்களுக்கு மகள் பிறந்திருக்கிறாள்.. இப்போது எங்கள் குடும்பம் 4ஆக வளர்ந்திருக்கிறது. வெல்கம் Mehwish சிவம் துபே என்று பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

Story first published: Saturday, January 4, 2025, 23:27 [IST]
Other articles published on Jan 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+