For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

20 ஓவர்லாம் வெயிட் பண்ண முடியாது.. ஒரே ஓவரில் 22 ரன்.. மிரள வைத்த சிஎஸ்கே வீரர்!!

கராச்சி : சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆட உள்ள ஷேன் வாட்சன், தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் ஆடி வருகிறார்.

Recommended Video

IPL 2020 : Ganguly picks 5 dates to start IPL if Corona reduces its impact

அந்த தொடரின் லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் அவர் அதிரடி ஆட்டம் ஆடி மிரள வைத்தார்.

34 பந்துகளில் 66 ரன்கள் குவித்து 151 ரன் சேஸிங்கை எளிதாக்கினார். தன் அதிரடி ஆட்டத்தால் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர்

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர்

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் அதன் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த க்வெட்டா கிளேடியேட்டர்ஸ் அணி - ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறி விட்ட கராச்சி கிங்ஸ் அணியும் மோதின.

கராச்சி முதல் பேட்டிங்

கராச்சி கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு ஷர்ஜீல் கான் டக் அவுட் ஆகி அதிர்ச்சி துவக்கம் அளித்தார். அடுத்து கேப்டன் பாபர் ஆசாம் 32, இப்திகார் அஹ்மது 21 ரன்கள் சேர்த்தனர். ரன் ரேட் ஏழுக்கும் குறைவாகவே இருந்தது.

டெல்போர்ட் அதிரடி

டெல்போர்ட் அதிரடி

அப்போது ஜோடி சேர்ந்த டெல்போர்ட் - வால்டன் அதிரடி ஆட்டம் ஆடினர். டெல்போர்ட் 44 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். 2 சிக்ஸ், 5 ஃபோர் அடித்தார் அவர். வால்டன் 20 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். அவர்கள் 19 மற்றும் 20வது ஓவரில் ஆட்டமிழந்தனர்.

சவாலான இலக்கு

ரிஸ்வான் 0, உசாமா மிர் 1 ரன் மட்டுமே எடுக்க கராச்சி கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் குவித்தது. க்வெட்டா அணிக்கு 151 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இது சவாலான இலக்காகவே கருதப்பட்டது.

ஆரம்பமே அதிர்ச்சி

ஆரம்பமே அதிர்ச்சி

சவாலான இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய க்வெட்டா அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அஹ்மத் ஷாசாத் 2 பந்துகளில் டக் அவுட் ஆனார். அடுத்து மற்றொரு துவக்க வீரர் ஷேன் வாட்சன் - குர்ரம் மன்சூர் ஜோடி சேர்ந்தனர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

வாட்சன் - மன்சூர் இருவரும் அதிரடி ஆட்டம் ஆடினர். மன்சூர் 1 சிக்ஸ், 9 ஃபோர் அடித்து 40 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அவரை விட அதிரடியாக ஆடினார் வாட்சன். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தனர்.

ஒரே ஓவரில் 22 ரன்

ஒரே ஓவரில் 22 ரன்

வாட்சன் ஒரே ஓவரில் 22 ரன்கள் குவித்தது பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அந்த ஓவருடன் ரன் ரேட் தேவை கணிசமாக குறைந்தது. வெற்றிக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலை வரை களத்தில் நின்றார்.

வாட்சன் ரன் குவிப்பு

வாட்சன் ரன் குவிப்பு

ஷேன் வாட்சன் 34 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். 4 சிக்ஸர், 7 ஃபோர் அடித்து இருந்தார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்தில், பென் கட்டிங் டக் அவுட் ஆனார். ஆனால், 20 ஓவர் வரை காத்திருக்காமல் வாட்சன் அதிரடி ஆட்டம் ஆடியதால் அதிக பந்துகள் மீதமிருந்தன.

க்வேட்டா வெற்றி

க்வேட்டா வெற்றி

அதனால், க்வெட்டா அணி நிதான ஆட்டம் ஆடி 16.2 ஓவரில் வெற்றியை எட்டியது. 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாக மட்டுமே அமைந்தது. க்வெட்டா அணி புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடம் பெற்று, அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

சிஎஸ்கேவுக்கும் இதே மாதிரி ஆடுங்க

சிஎஸ்கேவுக்கும் இதே மாதிரி ஆடுங்க

ஐபிஎல் தற்போது தள்ளி வைக்கப்பட்டாலும், விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஷேன் வாட்சன் இதே போல ஆட வேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் ஆசை.

Story first published: Monday, March 16, 2020, 16:10 [IST]
Other articles published on Mar 16, 2020
English summary
CSK players Shane Watson hit a fast fifty in PSL series. He played for Quetta Gladiators and scored 66 runs from 34 balls.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+