Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கையை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்த 'சென்னை சூப்பர் கிங்ஸ்'!

விசாகபட்டிணம்: இலங்கையுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், இலங்கை அணியின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் என்பது சிஎஸ்கே ரசிகர்களை துள்ளி குதிக்கச்செய்துள்ளது.

ஐபிஎல் அறிமுகமான பிறகு, இந்திய வீரர்கள் பிராந்தியவாரியாக பிரிக்கப்பட்டுவிட்டனர். ரோகித் ஷர்மா சிறப்பாக ஆடினால் மும்பை ரசிகர்களும், ரெய்னா பட்டையை கிளப்பினால் சென்னை ரசிகர்களும் அதிகம் சந்தோஷப்படுகிறார்கள் என்றால், அதற்கு காரணம், அந்தந்த பிராந்தியத்திற்குரிய ஐபிஎல் அணிகளில் அவர்கள் இருப்பதுதான்.

எனவேதான், இந்தியா பங்கேற்கும் எந்த ஒரு கிரிக்கெட் தொடரிலும், கலக்குவது நம்மூர் அணியை சேர்ந்த வீரரா என்று குறிப்பெடுக்க ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள்.

சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்கள்

சிஎஸ்கே வீரர் சிறப்பாக ஆடினால் தமிழ்நாட்டு ரசிகர்களும், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் சிறப்பாக ஆடினால் ஆந்திரா ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில், போட்டிபோட்டு பாராட்டு மழை பொழிவது இந்த மனநிலையில் இருந்துதான்.

கலக்கும் சிஎஸ்கே

கலக்கும் சிஎஸ்கே

பொதுவாகவே, இந்திய அணியில், கலக்கிவரும், டோணி உட்பட பல வீரர்கள் சென்னை சூப்பர் கிங்சை சேர்ந்தவர்கள்தான். உலக அளவில் நம்பர்-1 இடத்திலுள்ள ஸ்பின்னர் அஸ்வின் உட்பட பலரை இதற்கு உதாரணம் சொல்லலாம்.

பலே பங்களிப்பு

பலே பங்களிப்பு

இந்தியா விளையாடும் போட்டிகளின் போது சமூக வலைத்தளங்களில் தமிழ்நாட்டு ரசிகர்கள் அதிகமாக கொண்டாட்டம்போடுவதற்கு, சிஎஸ்கே வீரர்களின் சிறப்பான பங்களிப்பும் முக்கிய காரணம். அந்த அணிக்கு 2 வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், அந்த அணியினர் வேறு அணியினரால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளபோதிலும், அவர்களை வளர்த்து எடுத்தது சிஎஸ்கே என்பதால் சென்னை வீரர்களாகவே கருதுகின்றனர் ரசிகர்கள்.

நேற்றைய போட்டி

நேற்றைய போட்டி

உதாரணத்திற்கு, நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முக்கியமான கடைசி டி20 போட்டியையே பாருங்களேன். சென்னை அணிக்காக ஆடிய வீரர்கள்தான் பட்டையை கிளப்பினர். குறிப்பாக விக்கெட்டுகளை சாய்த்ததில் அவர்கள் பங்கு அபாரம்.

9 விக்கெட்டுகள் சிஎஸ்கேவுக்கு

9 விக்கெட்டுகள் சிஎஸ்கேவுக்கு

அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ரெய்னா 2 விக்கெட்டுகளையும், நெஹ்ரா மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். இவர்கள் அனைவரும் சிஎஸ்கே வீரர்களாகும். இதுதவிர சிறப்பாக ஒரு ரன்-அவுட்டையும் ஜடேஜா செய்தார். ஆக மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியது சிஎஸ்கே வீரர்கள். கடைசி விக்கெட் மட்டுமே மும்பை அணிக்காக ஆடும் பும்ராவுக்கு கிடைத்தது.

Story first published: Monday, February 15, 2016, 11:19 [IST]
Other articles published on Feb 15, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+