Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை அணிக்காக களம் காணும் 3 முக்கிய வீரர்கள்....வலைபயிற்சியில் தீவிரம்... செம பலம் தான் - வீடியோ!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 முக்கிய வீரர்கள் பயிற்சியில் கெத்து காட்டும் வீடியோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில் சி.எஸ்.கேவின் மீதே அனைவரின் பார்வையும் உள்ளது.

சென்னை அணி முதல் போட்டியாக வரும் ஏப்.10ம் தேதி டெல்லி அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் அணிக்கு புதிதாக எடுக்கப்பட்டுள்ள 3 வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது.

 சி.எஸ்.கே

சி.எஸ்.கே

கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி பல்வேறு போட்டிகளில் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக கேப்டன் தோனி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எனவே அதற்கெல்லாம் பதிலடி கொடுக்க இந்த முறை கிருஷ்ணப்பா கௌதம், புஜாரா, உத்தப்பா உள்ளிட்ட வீரர்களை சென்னை அணி வாங்கியுள்ளது.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

கடந்த சீசன் போன்று நடக்கக்கூடாது என்பதற்காக சென்னை அணி இந்த முறை முதல் ஆளாக மார்ச் 9ம் தேதியே பயிற்சிகளை தொடங்கியது. முதலில் சென்னையில் நடைபெற்று வந்த இந்த பயிற்சி முகாம் பின்னர் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏனென்றால் சென்னை அணிக்கு முதல் 5 போட்டிகள் மும்பையில் தான் நடைபெறவுள்ளது. இதில் தோனி, உத்தப்பா, புஜாரா உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர். விரைவில் அனைத்து வீரர்களும் அணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய வீடியோ

புதிய வீடியோ

இந்நிலையில் முக்கிய வீரர்கள் புஜாரா, கிருஷ்ணப்பா கௌதம், உத்தப்பா ஆகியோர் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பேசியுள்ள புஜாரா, களத்தில் சி.எஸ்.கே அணிக்காக இரங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அணிக்காக சிறப்பாக செயல்பட எதிர்பார்த்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதே போல உத்தப்பா, கடந்த 3 - 4 மாதங்களில் 4 - 5 முறை தனிமைப்படுத்தப்பட்டேன். தற்போது களத்தில் இருப்பது எனக்கு நிம்மதியாக உள்ளது என தெரிவித்தார்.

புதிய வீரர்கள்

புதிய வீரர்கள்

ராஜஸ்தான் அணிக்காக ஆடி வந்த உத்தப்பா தற்போது சென்னை அணியால் எடுக்கப்பட்டுள்ளார். அதே போல கிருஷ்ணப்பா கௌதம் கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக ஆடினார். புஜாரா கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு எந்த அணியாலும் ஏலத்திற்கு எடுக்கப்படவில்லை.

Story first published: Tuesday, March 30, 2021, 18:19 [IST]
Other articles published on Mar 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+