Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பதிரானா, கான்வே நீக்கம்.. 2026 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

சென்னை: 2026 ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணி தரப்பில் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 15 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை வைத்து சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனை ரசிகர்கள் கட்டமைத்து விவாதித்து வருகின்றனர்.

2026 ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணி தரப்பில் 15 வீரர்கள் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். ஒருவரை டிரேட் மூலமாக வாங்கிய சிஎஸ்கே அணி, மொத்தமாக 10 வீரர்களை விடுவித்துள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஆடுவார் என்று தெரிகிறது.

CSK Playing XI

ஜடேஜா, பதிரானா, கான்வே, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களை கொண்டு சிஎஸ்கே அணி ரசிகர்கள் பிளேயிங் லெவனை கட்டமைத்து வருகின்றனர். அந்த வகையில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே - சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கடந்த சீசனிலேயே ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் விளையாட விரும்பினார். தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் ருதுராஜ் கெய்க்வாட் மிடில் ஆர்டரில் விளையாடி வருவதால், நம்பர் 3ல் கேப்டன் ருதுராஜ் களமிறங்கவே வாய்ப்புகள் அதிகம். நம்பர் 4 பேட்டிங் வரிசையில் டிவால்ட் பிரெவிஸ் மற்றும் நம்பர் 5 பேட்டிங் வரிசையில் சிவம் துபே விளையாட வாய்ப்புகள் உள்ளது.

நம்பர் 6ல் ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன்னையும் சிஎஸ்கே அணி களமிறக்கக் கூடும். பின்னர் நம்பர் 7ல் தோனியும், நம்பர் 8ல் ஸ்ரேயாஸ் கோபால், நம்பர் 9ல் அன்சுல் கம்போஜ் மற்றும் நம்பர் 10ல் நேதன் எல்லீஸ் களமிறங்கக் கூடும். கடைசியாக நம்பர் 11ல் நூர் அஹ்மத் விளையாடுவார் என்று தெரிகிறது. இம்பேக்ட் பிளேயராக கலீல் அஹ்மத் களமிறங்கக் கூடும் என்று பார்க்கப்படுகிறது.

அதேபோல் தோனி சேப்பாக்கம் போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்புகள் இருப்பதால், உர்வில் படேல்லை எப்படியாவது சிஎஸ்கே அணி பிளேயிங் 12ல் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் குறி வைக்கும் என்றும் கருதப்படுகிறது. அதேபோல் ரசிகர்கள் நீங்களும் உங்களின் பிளேயிங் லெவனை கமெண்ட் செய்யுங்கள்.

Story first published: Sunday, November 16, 2025, 13:06 [IST]
Other articles published on Nov 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+