Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சிஎஸ்கே பிளேயிங் 12 இதுதான்.. தாறுமாறு டீம்.. அஸ்வின் தேர்வு செய்த அணியில் யாருக்கு இடம்?

சென்னை: 2026 ஐபிஎல் ஏலம் முடிவடைந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ட்விட்டரில் கேட்ட பிளேயிங் 12 குறித்த கேள்விக்கு, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பாணியில் ஒரு தரமான பதிலைக் கொடுத்துள்ளார். அஸ்வின் தேர்வு செய்துள்ள சிஎஸ்கே அணியின் பிளேயிங் 12 (இம்பேக்ட் வீரரையும் சேர்த்து) தற்போது இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த ஏலத்தின் முடிவில் சஞ்சு சாம்சன், பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா போன்ற பல புதிய முகங்களை சிஎஸ்கே அணி இணைத்துள்ளது. இந்நிலையில், "2026 சீசனுக்கான நமது பிளேயிங் 12 எப்படி இருக்கும்?" என்று சிஎஸ்கே தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்குப் பதிலளித்த முன்னாள் சிஎஸ்கே வீரரான அஸ்வின், தனது அட்டகாசமான அணித் தேர்வை வெளியிட்டுள்ளார்.

CSK Playing XI predicted by Ravichandran Ashwin for IPL 2026 Surprising Picks and Dhoni s Role

அஸ்வின் தேர்வு செய்த சிஎஸ்கே பிளேயிங் 12:

அஸ்வின் தேர்வு செய்துள்ள அணியில் சில சுவாரஸ்யமான மாற்றங்கள் உள்ளன. குறிப்பாகத் தொடக்க ஆட்டக்காரர் இடமும், வெளிநாட்டு வீரர்களின் தேர்வும் கவனிக்கத்தக்கது. அஸ்வின் தேர்வு செய்த சிஎஸ்கே அணி பேட்டிங் வரிசைப்படி -

ஆயுஷ் மத்ரே: மும்பையைச் சேர்ந்த இளம் அதிரடி ஆட்டக்காரர். இவரைத் தொடக்க வீரராக அஸ்வின் தேர்வு செய்துள்ளார்.

சஞ்சு சாம்சன்: ராஜஸ்தானிலிருந்து டிரேட் செய்யப்பட்ட சஞ்சுவை டாப் ஆர்டரில் துவக்க வீரராக தேர்வு செய்துள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட்: கேப்டன் ருதுராஜை 3-வது இடத்தில் இறங்க தேர்வு செய்துள்ளார்.

சிவம் துபே: மிடில் ஆர்டர் அதிரடிக்கு சிவம் துபே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெவால்ட் பிரேவிஸ்: 'பேபி ஏபி' என்று அழைக்கப்படும் பிரேவிஸ் 5-வது இடத்தில் இறங்குவார்.

பிரசாந்த் வீர்: 14.20 கோடிக்கு வாங்கப்பட்ட ஆல்-ரவுண்டர் இவர். அஸ்வின் இவர் நிச்சயம் ஒவ்வொரு போட்டியிலும் ஆட வேண்டும் என தேர்வு செய்துள்ளார்.

எம்.எஸ். தோனி: வழக்கம் போல ஃபினிஷர் ரோலில் 'தல' தோனியை தேர்வு செய்துள்ளார் அஸ்வின்.

அகீல் ஹொசைன் / மேட் ஹென்றி: ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து வெளிநாட்டுச் சுழற்பந்து வீச்சாளரான அகீல் ஹொசைன் அல்லது வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றி தேர்வு செய்யப்படுவார்.

கலீல் அகமது: முதன்மை இந்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளராக கலீல் அகமது இருப்பார்.

நாதன் எலிஸ்: டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான இவருக்கு அஸ்வின் நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் ஆட வேண்டும் என அஸ்வின் கருதுகிறார்.

நூர் அஹமது: ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான இவர் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டாக இருப்பார். .

இம்பேக்ட் பிளேயர்: சூழலுக்கு ஏற்ப அன்ஷுல் கம்போஜ், கார்த்திக் சர்மா, ஸ்ரேயாஸ் கோபால் அல்லது சர்பராஸ் கான் ஆகியோரில் ஒருவரை இம்பேக்ட் பிளேயராகப் பயன்படுத்தலாம் என்று அஸ்வின் கணித்துள்ளார்.

ரசிகர்கள் கருத்து

அஸ்வின் தேர்வு செய்துள்ள இந்த அணியில் பேட்டிங் ஆழம் அதிகமாக இருப்பதாகவும், பந்துவீச்சில் பல வாய்ப்புகள் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக 14.20 கோடிக்கு வாங்கப்பட்ட அன்கேப்ட் வீரர் பிரசாந்த் வீருக்கு ஆடும் லெவனில் அஸ்வின் இடம் கொடுத்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

Story first published: Sunday, December 21, 2025, 21:15 [IST]
Other articles published on Dec 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+