Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: சிஎஸ்கே அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் வைத்த ஆப்பு.. பிளே ஆப் சிக்கல்.. இனி என்ன செய்யணும்?

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பிளே ஆப் வாய்ப்பு என்னவாகும் என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது தொற்றிக்கொண்டுள்ளது. நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி பெற்ற வெற்றியால், சிஎஸ்கே அணியின் பிளே ஆப் வாய்ப்பு எளிதானதா அல்லது மேலும் சிக்கலானதா? சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இனி என்ன செய்ய வேண்டும்? என்று பார்க்கலாம்.

2026 ஐபிஎல் தொடரில் முதல் 4 இடங்களை பிடிக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முறையே 13 மற்றும் 12 புள்ளிகளுடன் முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. நேற்றைய போட்டியில் பலம் வாய்ந்த ஆர்சிபி அணியை வீழ்த்தியதன் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி 9 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் வலுவாக உள்ளது. ஆனால், சிஎஸ்கே அணியோ இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் தவித்து வருகிறது.

CSK Playoff Scenarios 2026 How Gujarat s Win Over RCB Impacts Chennai Super Kings Top 4 Chances

ஆர்சிபி அணிக்கு எதிரான குஜராத் அணியின் வெற்றி சிஎஸ்கே அணிக்கு சாதகமானதா என்றால் நிச்சயமாக இல்லை. குஜராத் டைட்டன்ஸ் அணி 10 புள்ளிகளை எட்டியுள்ளதால், புள்ளிப்பட்டியலில் முதல் 5 அணிகளுக்கும் மற்ற அணிகளுக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற 4வது இடத்தை பிடிக்க வேண்டும் என்ற நிலையில், குஜராத் அணியின் இந்த அபார முன்னேற்றம் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் பிளே ஆப் வாய்ப்பு முன்பை விட தற்போது மேலும் கடினமான பாதையை நோக்கி சென்றுள்ளது.

சரி, சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய இனி என்ன தான் செய்ய வேண்டும்? சிஎஸ்கே அணிக்கு இன்னும் 6 லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு எந்தவித சிக்கலும் இன்றி தகுதி பெற குறைந்தது 16 புள்ளிகளாவது தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள 6 போட்டிகளில் சிஎஸ்கே அணி குறைந்தது 5 போட்டிகளிலாவது பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தாக வேண்டும். ஒரு போட்டியில் தோற்றால் கூட நெட் ரன் ரேட் மற்றும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்திருக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்.

IPL 2026: ஹர்திக் பாண்டியா மீது பழிபோட்டு தப்பிக்க முடியாது.. பும்ரா, சூர்யகுமாரை விளாசிய பிஷப்

IPL 2026: ஹர்திக் பாண்டியா மீது பழிபோட்டு தப்பிக்க முடியாது.. பும்ரா, சூர்யகுமாரை விளாசிய பிஷப்

மும்பை, டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிராக சிஎஸ்கே அணி தனது அடுத்தடுத்த போட்டிகளில் மோத உள்ளது. இதில் 5 வெற்றி என்பது சவாலான காரியம் என்றாலும் சாத்தியமில்லாதது அல்ல. ஒவ்வொரு முறையும் வீழ்ந்த பிறகு விஸ்வரூபம் எடுத்து பிளே ஆப் சுற்றுக்குள் கம்பீரமாக நுழைவது சிஎஸ்கே அணிக்கு கைவந்த கலை. அதே ஆக்ரோஷத்துடன் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த முறையும் சிஎஸ்கே அணி வீறுநடை போடுமா? என்பதை பார்க்கலாம்.

Story first published: Friday, May 1, 2026, 10:52 [IST]
Other articles published on May 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+