Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே-வின் அடிமடியில் கைவைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்.. ஜடேஜா + அதிரடி மன்னன் பிரெவிஸ் கொடுத்தால் சஞ்சு

சென்னை: 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக வீரர்கள் பரிமாற்றம் (டிரேட்) குறித்த பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்கு அனுப்ப ராஜஸ்தான் நிர்வாகம் தயாராக இருந்தாலும், அதற்கு விலையாக சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை மட்டும் போதாது; அவருடன் தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரர் டிவால்ட் பிரெவிஸையும் சேர்த்துத் தருமாறு ராஜஸ்தான் ராயல்ஸ் நிபந்தனை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

CSK - Rajasthan Royals IPL Trade RR Demands Dewald Brevis Ravindra Jadeja for Sanju Samson

பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏன்?

இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவலின்படி சஞ்சு சாம்சனை ஜடேஜாவுடன் பரிமாறிக்கொள்ள இரு அணிகளும் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அந்த தகவலில், "ஜடேஜா மற்றும் சாம்சன் இருவருமே தலா ₹18 கோடி மதிப்புள்ள வீரர்கள் என்பதால், இந்த ஒப்பந்தம் இந்நேரம் எளிதாக முடிந்திருக்க வேண்டும். ஆனால், இந்த நேரடி வீரர் பரிமாற்றத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னும் சம்மதிக்கவில்லை என்பது தெரிகிறது. அந்த அணி, கூடுதலாக மற்றொரு வீரரையும் ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துவதே இந்த பேச்சுவார்த்தையில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"சிஎஸ்கே-ராஜஸ்தான் ஒப்பந்தத்தில் முட்டுக்கட்டையாக இருப்பது, கடந்த சீசனின் பாதியில் சிஎஸ்கே அணியில் இணைந்த டிவால்ட் பிரெவிஸை ராஜஸ்தான் அணி கேட்பதுதான். சிஎஸ்கே-வில் இணைந்த பிறகு, உலகெங்கிலும் உள்ள டி20 லீக் போட்டிகளில் பிரெவிஸ் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார்" என்றும் கூறப்பட்டுள்ளது.

யார் இந்த டிவால்ட் பிரெவிஸ்?

கடந்த 2025 ஐபிஎல் சீசனில், காயமடைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்கிற்குப் பதிலாக சிஎஸ்கே அணியில் இணைந்தார் டிவால்ட் பிரெவிஸ். கிடைத்த வாய்ப்புகளில் தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்த போதிலும், சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாகப் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்தது. ஆனாலும், பிரெவிஸின் ஆட்டம் பெரிதும் பாராட்டப்பட்டது.

சிஎஸ்கே-வின் நிலைப்பாடு என்ன?

ரவீந்திர ஜடேஜாவைத் தவிர வேறு எந்த வீரரையும் இந்த டிரேட் ஒப்பந்தத்தில் சேர்க்க சிஎஸ்கே அணிக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. சஞ்சு சாம்சனைத் தக்கவைக்க ராஜஸ்தான் அணி செலுத்திய அதே ₹18 கோடிக்குத்தான் ஜடேஜாவையும் சிஎஸ்கே தக்கவைத்தது. எனவே, சம மதிப்புள்ள வீரர்களை நேரடியாகப் பரிமாறிக்கொள்வதே சரியாக இருக்கும் என சிஎஸ்கே கருதுவதாகத் தெரிகிறது.

ஐதராபாத் அணியின் நிலைப்பாடு

இதற்கிடையே, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசெனை 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கக்கூடும் என்று இந்த வார தொடக்கத்தில் செய்திகள் வெளியாகின. கிளாசெனை ₹23 கோடிக்கு ஐதராபாத் அணி தக்கவைத்திருந்தது. ஆனால், இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகிய இருவரையும் விடுவிக்கும் எண்ணம் ஐதராபாத் அணிக்கு இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

Story first published: Sunday, November 9, 2025, 15:05 [IST]
Other articles published on Nov 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+