மீண்டும் ஒரு திரில் வெற்றி.... பெங்களூருவை 6 விக்கெட்டில் வீழ்த்தியது சிஎஸ்கே!
Recommended Video

புனே: புனேயில் நடந்த ஆட்டத்தில் தோனி மீண்டும் அதிரடியாக விளையாட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றொரு திரில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. புனேயில் நடக்கும் இந்த சீசனின் 35வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.
சிஎஸ்கே அணி, 9 ஆட்டங்களில் 6ல் வெற்றி, 3ல் தோல்வியுடன் 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அடுத்துள்ள 5 ஆட்டங்களில் 2ல் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு சுலபமாக முன்னேறிவிடும். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முதல் அணியாவதற்காக சிஎஸ்கே தயாராகி வருகிறது.
அதே நேரத்தில் பெங்களூர் அணி 8 ஆட்டங்களில் 3ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் உள்ளது. இதுவரை கோப்பையை வெல்லாத பெங்களூர் மீதமுள்ள 6ல் 5ல் வென்றால்தான் பிளே ஆப் சுற்றுக்கு நுழைய முடியும்.

திரில் வெற்றிகள்
இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் சிஎஸ்கேவின் பேட்டிங் அபாரமாக உள்ளது. குறிப்பாக கேப்டன் கூல் தோனி, ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா என ஒவ்வொருவரும் கலக்கி வருகின்றனர். திரில் வெற்றிகளுக்கு சொந்தக்காரர்களாக சிஎஸ்கே உள்ளது. கடைசியாக கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததால், வெற்றி பெறவேண்டும் என்ற வேட்கையுடன் களமிறங்குகிறது.

சேலஞ்ச் செய்யுமா பெங்களூர்
இந்த முறை கோப்யை வெல்வோம் என்று சபதம் எடுத்து வந்துள்ள விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி தோல்விகளால் துவண்டுள்ளது. அதே நேர்ததில் கடைசியாக நடந்த ஆட்டத்தில் மும்பையை வென்றதன் மூலம் தங்களுடைய இருப்பை காட்டியுள்ளது. வெற்றியைத் தொடர பெங்களூர் முயற்சிக்கும்.

பெங்களூர் திணறுகிறது
புனேயில் நடக்கும் ஆட்டத்தில் டாஸை வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, சிஎஸ்கேவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சுருண்டது. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. பார்திவ் படேல் 53, டிம் சைதி 36 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஜடேஜா 3, ஹர்பஜன் 2 விக்கெட்களை வீழ்த்தினர்,

மீண்டும் முதலிடத்தில் சிஎஸ்கே
அபாரமாக பந்து வீசி கட்டுப்படுத்திய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 128 ரன்கள் என்ற சுலப இலக்குடன் களமிறங்கியது. 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வாட்சன் 11, ராயுடு 32, சுரேஷ் ரெய்னா 25, துருவ் ஷோரி 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தோனி 23 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 31 ரன்களும், பிராவோ 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. பெங்களூர் அணி 6வது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications