Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி, ராயுடு அதிரடியில் இதயங்கள் படபடக்க... ஹெலிகாப்டர்கள் பறக்க... சிஎஸ்கேவுக்கு அபார வெற்றி!

Recommended Video

மாஸ் காட்டிய தோனி... அதிரடியாக வென்ற சென்னை

பெங்களூரு: இந்த ஐபிஎல் சீசனில் பரபரப்பு ஆட்டங்களுக்கு பெயர் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மற்றொரு கடைசி ஓவர் சூப்பர் திரில் வெற்றியைப் பெற்றது. பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி, ராயுடு அதிரடி ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நாளுக்கு நாள் பரபரப்பையும் ஆர்வத்தையும் எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பெங்களூருவில் இன்று நடக்கும் சீசனின் 24வது ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் துவங்கி இதுவரை தான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணி, ரசிகர்களுக்கும் எதிரணிகளுக்கும் ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும் வகையில் விளையாடியுள்ளது. இதுவரை 5 ஆட்டங்களில் நான்கில் வென்று, புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக மிகச் சிறந்த வெற்றி கேப்டனாக வலம் வரும் விராட் கோஹ்லி பெங்களூரு அணியின் கேப்டனாக உள்ளார். இந்த அணி 5 ஆட்டங்களில் 2ல் வெற்றி, 3ல் தோல்வி அடைந்துள்ளது. இதுவரை பெங்களூரு கோப்பையை வென்றதில்லை என்ற அவப்பெயரை துடைப்பதற்கு கோஹ்லி உறுதி பூண்டுள்ளார். ஆனால், இதுவரை நடந்த ஆட்டங்களில் அந்த அணி சரியாக சோபிக்கவில்லை.

100வது போட்டியில் கோஹ்லி

100வது போட்டியில் கோஹ்லி

பெங்களூருவில் நடக்கும் ஆட்டம், விராட் கோஹ்லிக்கு, பெங்களூரு அணியின் கேப்டனாக 100வது ஆட்டமாகும். ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதில் ரெய்னாவுக்கும் கோஹ்லிக்கும் போட்டி நடந்து வருகிறது. கேப்டனாக 100 ஆட்டத்தில் வெற்றி பெறும் ஆர்வத்துடன் கோஹ்லி உள்ளார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

சிஎஸ்கே, பெங்களூரு அணிகளுக்கு இடையே இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2014ல் இருந்து தொடர்ந்து நான்கு ஆட்டங்களில் சிஎஸ்கே அணி, பெங்களூருவை வென்றுள்ளது. இன்று வென்று புள்ளிப் பட்டியலி்ல் மீண்டும் முதலிடத்தைப் பிடிக்க சிஎஸ்கேவும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புக்காக பெங்களுருவும் மோதுகின்றன.

205 ரன்கள் சேர்த்தது

205 ரன்கள் சேர்த்தது

பெங்களூருவில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி துவக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது. டிவில்லியர் 68, டிகாக் 53 ரன்கள் எடுத்தனர். பெங்களூர் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.

கடைசி ஓவர் திரில் வெற்றி

கடைசி ஓவர் திரில் வெற்றி

206 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங் துவக்கிய சிஎஸ்கே அணி, வாட்சன் 7, ரெய்னா 11, சாம் பில்லிங்க் 9, ஜடேஜா 3 ஆகியோரை இழந்து 8.6 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என்று திண்டாடியது. அப்போது ஜோடி சேர்ந்த அம்பதி ராயுடு, தோனி அதிரடியாக விளையாடினர். ராயுடு 82 ரன்களும், தோனி கடைசி வரை நின்று 70 ரன்களும் எடுக்க சிஎஸ்கே 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் மீண்டும் ஒரு திரில் வெற்றியை சிஎஸ்கே பெற்றது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Story first published: Wednesday, April 25, 2018, 23:56 [IST]
Other articles published on Apr 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+