ஐபிஎல் கோப்பையை தவறவிட்டா என்னங்க... டிவிட்டர்ல சாதனை செஞ்சாச்சு... சிஎஸ்கே நன்றி
சென்னை : ஐபிஎல் 2020 சீசனில் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தை பிடித்த சிஎஸ்கே அணி தொடரிலிருந்து வெளியேறியது.
ஆயினும் ஐபிஎல் 2020 தொடரின்போது அதிகமாக டிவீட் செய்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற அணி என்ற சாதனையை புரிநதுள்ளது சிஎஸ்கே.
அந்த அணியின் விசில் போடு, சிஎஸ்கே, யெல்லோவ் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் முதலிடங்களை பிடித்துள்ள நிலையில், தங்களின் பின்னால் எப்போதும் இருக்கும் ரசிகர்களுக்கு அந்த அணி நன்றி தெரிவித்துள்ளது.

தொடரிலிருந்து வெளியேறிய சிஎஸ்கே
ஐபிஎல் 2020 தொடரில் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் தோல்வியுற்று ப்ளே -ஆப் சுற்றிற்கு தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியது. அந்த அணியின் பாப் டூ பிளசிஸ் மட்டுமே 13 போட்டிகளில் விளையாடி, 449 ரன்களை எடுத்து அணியின் பெருமையை காப்பாற்றியுள்ளார்.

சொதப்பிய தோனி
இதேபோல அதிகபட்சமாக அணியின் சாம் குர்ரான், 14 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது எகானமி ரேட் 8.19. தோனி உள்ளிட்ட அணியின் மற்ற வீரர்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தனர். ஆயினும் ஐபிஎல்லில் 200 போட்டிகளை கடந்து தோனி சாதனை புரிந்தார்.

சிஎஸ்கே சாதனை
இந்நிலையில் ஐபிஎல் தொடரின்போது அதிகமாக ட்விட் செய்து ரசிகர்களை கவர்ந்த அணி என்ற பாராட்டை தற்போது சிஎஸ்கே பெற்றுள்ளது. தொடரில் அணியின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து டிவிட்டரில் பதிவிட்டது சிஎஸ்கே. இந்த சாதனையில் இரண்டாவது மற்றும் 3வது இடங்களை ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பெற்றுள்ளன.

டிவிட்டரில் சிஎஸ்கே நன்றி
இந்நிலையில், தங்களுக்கு பின்னால் இருந்து எப்போதும் ஆதரவு அளித்துவரும் ரசிகர்களுக்கு சிஎஸ்கே தனது பாராட்டை தெரிவித்துள்ளது. ஐபிஎல்லின்போது அதிகமாக வரவேற்பை பெற்ற ஹாஷ்டேக் என்ற பெருமையும் விசில்போடுவிற்கு கிடைததுள்ளது. இந்த பட்டியல்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சிஎஸ்கே பகிர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications