Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூப்பர் விசில் போடுங்க.... சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 100வது வெற்றி!

டெல்லி: ஐபிஎல்லில் டெல்லி்க்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று தனது 100வது வெற்றியைப் பதிவு செய்தது.

2008ம் ஆண்டில் இருந்து ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. அதைத் தவிர 2010 முதல் 2014 வரை சாம்பியன்ஸ் லீக் டி-20 போட்டிகளும் நடத்தப்பட்டன.

CSK registered its 100th win

இந்த இரண்டுத் தொடர்களையும் சேர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று 100வது வெற்றியைப் பதிவு செய்தது.

ஐபிஎல் போட்டியில் இந்த சீசனில் இதுவரை விளையாடியுள்ள 8 ஆட்டங்களையும் சேர்த்து, சிஎஸ்கே அணி 141 ஆட்டங்களில் 85 வெற்றிகள், 54 தோல்விகளைப் பெற்றுள்ளது. 2 ஆட்டங்களில் முடிவு ஏதும் ஏற்படவில்லை.

சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் 25 ஆட்டங்களில் 15ல் வெற்றி, 9ல் தோல்வியைப் பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு ஏதும் இல்லாமல் முடிந்துள்ளது. டில்லிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றி, சிஎஸ்கே அணிக்கு 100வது வெற்றியாகும்.

மும்பை இந்தியன்ஸ் இதுவரை 105 ஆட்டங்களில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சிஎஸ்கே அணி கடந்த 2 சீசன்களில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, May 1, 2018, 14:49 [IST]
Other articles published on May 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+