Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே கொடுத்த செம பதிலடி.. சாம்சனுக்காக யாரையும் விட்டு தர முடியாது.. வேறு வழியில் பாத்துக்குறோம்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கடைசி இடத்தை சிஎஸ்கே அணி பிடித்திருந்தது இதனால் சிஎஸ்கே தங்களுடைய அணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே சில வீரர்கள் காயமடைந்த நிலையில் மாற்று வீரர்களை தேர்வு செய்து பேட்டிங்கில் உள்ள சிக்கலை தீர்த்து இருக்கின்றது. இந்த தருணத்தில் ராஜஸ்தான் அணியில் கேப்டனாக இருக்கும் சாம்சனுக்கும் அந்த அணி நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது.

CSK on sanju samson

இதனால் சஞ்சு சாம்சன் வேறு அணிக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சிஎஸ்கே அணியில் தோனிக்கு வயதாகி வருவதால், அவருக்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சமை வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்தது.

இதற்காக ராஜஸ்தான் அணியை தொடர்பு கொண்ட போது அந்த அணி நிர்வாகம் சாம்சனை நாங்கள் தாராளமாக தருகிறோம். ஆனால் அதற்கு பதில் நீங்கள் ஜடேஜா சிவம் துபே அல்லது ருதுராஜ் என இந்த மூன்று வீரர்களின் இரண்டு பேரை மட்டும் எங்களுக்கு தாருங்கள் என்று கூறி இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த பேச்சு சிஎஸ்கேவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ராஜஸ்தான் அணி தொடர்ந்து இது குறித்து கேட்டு வந்திருக்கிறது.
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆஃபரை மறுத்து இருக்கின்றது. மற்ற வீரர்களை விட்டுக் கொடுக்க முடியாது என்றும் நாங்கள் சஞ்சு சாம்சனை மினி ஏலத்தில் வாங்கிக் கொள்கிறோம் என்றும் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் சஞ்சு சாம்சன் மினி ஏலத்தில் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

சஞ்சு சாம்சனை எடுக்க வேண்டும் என்பதற்காக சிஎஸ்கே அணி தங்கள் வசம் உள்ள வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர்களை வெளியே அனுப்ப திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக அஸ்வின் , ரச்சின் ரவிந்தரா, கான்வே உள்ளிட்ட வீரர்கள் வெளியே போக உள்ளனர். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு சுமார் 40 கோடி ரூபாய் கிடைக்கும். அதை வைத்து சஞ்சு சாம்சனை வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவில் சிஎஸ்கே இருக்கின்றது.

Story first published: Wednesday, August 13, 2025, 23:27 [IST]
Other articles published on Aug 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+