Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயமா இருக்கா..போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்.. சிஎஸ்கே வெளியிட்ட மாஸ் வீடியோ.. தலயின் எச்சரிக்கை

மும்பை : 2022 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு மாசான வீடியோவை வெளியிட்டு இருக்கிறது.

இதில் 2022 ஐபிஎல் போட்டியில் வீரர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்தும் அடுத்த ஆண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்தும் ஒரு முன்னோட்டம் போல் இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இது தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் இடை வேகமாக பரவி வருகிறது.

கான்வே

கான்வே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக இருந்த கான்வே விக்ரம் படத்தில் பகத் பாஸில் பேசும் வசனத்தை போட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பதிவிட்டு இருக்கிறார்கள். அதில் எங்களுக்கு எந்த ரூல்ஸும் இல்ல அப்படி இருந்தா மீறப்படும் என்று கான்வே சொல்வது போல் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஹங்கர்கேகர்

ஹங்கர்கேகர்

இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ஹங்கேர்கர் முதல் சீசனில் விளையாடவில்லை. அப்போது அவர் பயிற்சியில் எடுத்துக் கொண்டிருக்கும் வீடியோவை போட்டு லவ் டுடே படத்தில் பிரதீப் நீ உருட்டி உருட்டு என்று சொல்லும் வசனத்தை போட்டு வீடியோ பதிவிட்டு இருக்கிறார்கள்.

அம்பத்தி ராயுடு

அம்பத்தி ராயுடு

இதேபோன்று ஹங்கேர்கர் கோலம் போடும் வீடியோவை போட்டு ஜிபி முத்து நீ ஒரு ஆர்டிஸ்ட்னு தெரியாம போச்சே என்று பேசும் வசனத்தையும் பதிவிட்டு இருக்கிறார்கள். இதை தொடர்ந்து பிராவோ ஏதோ பாடலை பாடிக் கொண்டிருக்கும் போது ராயூடு என்னென்ன கதை எல்லாம் சொல்றான் பாருங்க.. கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றான் அப்படி என்ற வசனத்தை போட்டு இருக்கிறார்கள்.

தல தோனி

இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் ஸ்டோக்சை தேர்வு செய்து இருக்கிறது. இதனால் ஸ்டோக்ஸ் புகைப்படத்தை பதவிட்டு தல தோனி, மற்ற அணிகளுக்கு சொல்வது போல் பயமா இருக்கா, இன்னும் போகப் போக இன்னும் பயங்கரமா இருக்கும் என்று எதிரணிக்கு எச்சரிக்கை கொடுப்பது போல் வீடியோவை முடித்து இருக்கிறார்கள்.

Story first published: Saturday, December 31, 2022, 21:29 [IST]
Other articles published on Dec 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+