For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விடுவிக்கப்பட்டார் ஹர்பஜன்.. சிஎஸ்கேவில் அவுட்டாகும் முதல் "பெரிய கை".. தோனி எடுத்த பரபர முடிவு

சென்னை: 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில் தற்போது சிஎஸ்கே அணியில் இருந்து ஹர்பஜன் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2021 ஐபிஎல் தொடர் வரும் மே மாதம் நடக்க உள்ளது. இந்தியாவில் நடத்துவது குறித்து பிப்ரவரி முதல் வாரம் நடக்க உள்ள ஏலத்தில் முடிவுகள் எடுக்கப்படும் என்கிறார்கள்.

இந்த ஏலத்திற்காக ஐபிஎல் அணிகள் இப்போதே தயார் ஆக தொடங்கிவிட்டது. பெரிய அளவில் இந்த தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 11ம் தேதி ஏலத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாளை

நாளை

இன்று மாலை வரை மட்டுமே ஐபிஎல் அணிகள் தாங்கள் வெளியேற்றும் வீரர்களின் லிஸ்டை தயாரிக்க முடியும். இன்று மாலை ஐபிஎல் நிர்வாகத்திடம் அணிகள் தங்கள் லிஸ்டை தர வேண்டும். இன்று இரவு அல்லது நாளை காலை இந்த லிஸ்ட் குறித்த விவரங்கள் மொத்தமாக வெளியாகும்.

பல அணிகள்

பல அணிகள்

கடந்த ஐபிஎல்லில் சரியாக ஆடாத வீரர்களை ஒவ்வொரு அணியும் வெளியேற்றும். இன்னும் சில அணிகள் அதிக ஏலத்திற்கு எடுக்கப்பட்ட முக்கியமான வீரர்களை வெளியே அனுப்பிவிட்டு, பின் அதே வீரர்களை குறைந்த தொகைக்கு ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐபிஎல் 2021 இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில் தற்போது சிஎஸ்கே அணியில் இருந்து ஹர்பஜன் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவர் 2021 ஐபிஎல் ஏலத்தில் பிற அணியால் எடுக்கப்படும் வாய்ப்பு குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆடவில்லை

ஆடவில்லை

2020 ஐபிஎல் தொடரில் ஹர்பஜன் ஆடவில்லை. குடும்ப விஷயங்களை காரணம் காட்டி இவர் ஐபிஎல்லில் ஆடவில்லை. இடையில் இவர் தோனியை பல இடங்களில் விமர்சனம் செய்து டிவிட்களை செய்து வந்தார். இந்த நிலையில் தற்போது ஹர்பஜன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புதிய வீரர்

புதிய வீரர்

சிஎஸ்கே அணி இதனால் 2021 ஐபிஎல் ஏலத்தில் புதிய ஸ்பின் பவுலர்கள் மீது கவனம் செலுத்தும். அதிக விக்கெட் எடுக்க கூடிய ஸ்பின் பவுலர்கள் மீது சிஎஸ்கே கவனம் செலுத்தும். இந்த முறை ஐபிஎல் ஏலம் சிறிய அளவில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, January 20, 2021, 16:21 [IST]
Other articles published on Jan 20, 2021
English summary
CSK released Harbhajan Singh officially ahead of the IPL 2020 mini-auction in February.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+