சென்னை: சிஎஸ்கே தரப்பில் நட்சத்திர வீரர்களான மதீஷா பதிரானா, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிப்பாட்டி, வன்ஷ் பேடி,ல் ஆன்ரே சித்தார்த், தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷேக் ரஷீத், கமலேஷ் நாகர்கோட்டி உள்ளிட்டோரை விடுவித்துள்ளது. இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் கையில் ரூ.43.4 கோடி இருக்கிறது. இதனை வைத்து 9 வீரர்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடக்க உள்ளது. இதனையொட்டி ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியால் ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் சிஎஸ்கே அணி இந்த முறை மொத்தமாக 12 வீரர்களை விடுவித்துள்ளது.

ஏற்கனவே ஜடேஜா மற்றும் சாம் கரண் இருவரையும் ராஜஸ்தான் அணிக்கு டிரேட் மூலமாக கொடுத்துவிட்டு, சஞ்சு சாம்சனை வாங்கியுள்ளது. இந்த நிலையில் 10 வீரர்களை ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெவான் கான்வெ, ரச்சின் ரவீந்திரா, பதிரானா, ராகுல் திரிப்பாட்டி, தீபக் ஹூடா, ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி, ஆன்ட்ரே சித்தார்த், விஜய் சங்கர் மற்றும் கமலேஷ் நாகர்கோட்டி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் கையிருப்பில் ரூ.43.4 கோடி இருக்கிறது. அதேபோல் 9 வீரர்களை வாங்க வேண்டிய தேவை உள்ளது. அதேபோல் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் ரீடெய்ன் செய்யப்பட்ட ஜடேஜா, பதிரானா உள்ளிட்டோரை சிஎஸ்கே அணி விடுவித்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் பயிற்சியாளர் ஃபிளமிங்கின் ஆஸ்தான நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களான டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் விடுவிக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்த தயாராகி வருவதாக பார்க்கப்படுகிறது.
ரீடெய்ன் செய்த வீரர்கள் பட்டியல்: ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ், தோனி, உர்வில் படேல், சிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ணா கோஷ், நூர் அஹ்மத், கலீல் அஹ்மத், அன்சுல் கம்போஜ், நேதன் எல்லீஸ், குர்ஜப்னீத் சிங், ஸ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி.