Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK Roar 2026: பிராவோவை அவுட்டாக்காமல் விட்டு கொடுத்த தோனி.. இருவரும் இணைந்து நடனம்

சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் நடத்திய ROAR 2026 கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிஎஸ்கே நட்சத்திர வீரர் தோனியும், முன்னாள் சக வீரர் டுவைன் பிராவோவும் உற்சாகமாக நடனமாடியது நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக இருக்கும் பிராவோ உள்ளிட்ட பல சிஎஸ்கே முன்னாள் வீரர்கள் இந்த நிகழ்வில் மீண்டும் ஒன்றிணைந்தனர்.

சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ ஒன்றில், பிராவோ தனது பிரபலமான 'சாம்பியன்' பாடலை ரசிகர்கள் முன்பு நிகழ்த்தினார். சிஎஸ்கே அணியினர் முன்னிலை வரிசையில் அமர்ந்திருக்க, பிராவோ தோனியிடம் சென்று கட்டித்தழுவி, பாடலின் இசைக்கு இருவரும் நடனமாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் மற்றும் பிற தளங்களில் வைரலாக பரவியது.

தோனி மற்றும் பிராவோவின் இந்த குதூகலமான தருணத்தை சிஎஸ்கே. அணியின் மற்ற வீரர்கள் கைதட்டி ரசித்தனர். பிராவோ கொண்டாட்டங்களையும், தோனியின் புன்னகையையும் மிஸ் செய்கிறோம்" என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதை தொடர்ந்து நடைபெற்ற நட்பு ரீதியிலான போட்டியில் பிராவோ இறங்கி வந்து சிக்சர் அடிக்க முயற்பட்ட போது, தோனி பந்தை பிடித்தும் அவரை ஸ்டம்பிங் செய்யாமல் விட்டார்.

தனது காலகட்டத்தின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான டுவைன் பிராவோ, இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்ற பெருமைக்குரியவர். ஐபிஎல்-லில் தனது பெரும்பான்மையான வாழ்க்கையை சிஎஸ்கேவுடனேயே கழித்தார். மும்பை இந்தியன்ஸில் மூன்று சீசன்களுக்குப் பிறகு, 2011 இல் சிஎஸ்கேவில் இணைந்து, அதே அணியில் ஓய்வும் பெற்றார். சிஎஸ்கே தடை செய்யப்பட்ட சீசனில் குஜராத் லயன்ஸுக்காகவும் விளையாடினார்.

சிஎஸ்கே.வுக்காக ஐபிஎல்-லில் 116 போட்டிகளில் விளையாடிய பிராவோ, 140 விக்கெட்டுகளையும், 1004 ரன்களையும் குவித்தார். சிஎஸ்கே வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடம்பிடித்தார். இதற்கிடையே, தோனி தனது ஓய்வுபெற்ற சக வீரர்கள் அனைவருடனும் நல்லுறவைப் பேணி மகிழ்ச்சியான மனநிலையில் காணப்பட்டார்.

ஐபிஎல் 2026 எம்.எஸ். தோனியின் கடைசி சீசனாக இருக்குமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சஞ்சு சாம்சனின் அணி சேர்க்கை இந்த வதந்திகளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், அளித்த பேட்டியில் தோனி ஐபிஎல் 2026 இல் விளையாடுவார் என்பதை உறுதிப்படுத்தினார்.

44 வயதான தோனி, ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோருடன், ஐபிஎல்-இன் ஒவ்வொரு பதிப்பிலும் பங்கேற்ற நான்கு செயலில் உள்ள வீரர்களில் ஒருவர் ஆவார்.தனது ஐபிஎல் வாழ்க்கையில், தோனி 278 போட்டிகளில் 5,439 ரன்கள் எடுத்துள்ளார். அதில் அவரது சராசரி 38 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 137 ஆகவும் உள்ளது. இது ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் அவரை ஆறாவது இடத்தில் உள்ளார்.

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி, தனது 2026 ஐபிஎல் சீசனை மார்ச் 30 அன்று குவாஹாட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தொடங்குகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நடைபெறும்.

இதை தொடர்ந்து சி.எஸ்.கே., ஏப்ரல் 3 அன்று சென்னை சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸையும், ஏப்ரல் 5 அன்று பெங்களூருவில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவையும் எதிர்கொள்கிறது. பின்னர், ஏப்ரல் 11 அன்று டெல்லி கேபிடல்ஸை மீண்டும் சென்னையில் சந்திக்கும். இப்போட்டிகள் அனைத்தும் இரவு 7:30 மணிக்கு நடைபெறும்.

Story first published: Sunday, March 22, 2026, 20:29 [IST]
Other articles published on Mar 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+