CSK Roar 2026 கோலாகலமாக முடிந்த சிஎஸ்கே திருவிழா.. ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி, சிவகார்த்திகேயன் பங்கேற்பு
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடத்திய "ROAR '26" விழா, எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அணியின் புகழ்பெற்ற பாரம்பரியம் மற்றும் ரசிகர்களை கொண்டாடும் இவ்விழா, கிரிக்கெட், பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடந்தது. 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணியின் பல முன்னாள் வீரர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அந்த இடமே திருவிழா கோலம் பூண்டது. தோனி, தோனி என்று ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பியவாறு மைதானத்தில் கொண்டாடினர்.

ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரி ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோசத்தை தந்தது. பிரபல நடிகரும், இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி நிகழ்ச்சியை சிறிது நேரம் தொகுத்து வழங்கினார். அதன் பிறகு யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்று, மேடையில் பேசி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
இதனையடுத்து சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹேடன், முரளி விஜய், எஸ். பத்ரிநாத் போன்ற 'OG' சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மைதானத்திற்கு ரசிகர்களின் உற்சாக குரலில் வந்தனர். இ இருப்பினும், "OG CSK கும்பல்!", "தல தரிசனம்" என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கள் விவரிக்க முடியாத மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
முதலில் சிஎஸ்கே வீரர்கள் பங்குபெற்ற வலைப்பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு சிஎஸ்கேவின் பழைய வீரர்கள் மற்றும் புதிய வீரர்கள் பங்கேற்கும் நட்பு ரீதியிலான பயிற்சி ஆட்டம் நடந்தது. இதில் ரெய்னா, ஹைடன், மைக்கேல் ஹஸி உள்ளிட்ட வீரர்கள் பந்துகளை சிக்சர்களுக்கு விரட்டினர். இந்த நிகழ்ச்சியின் போத டி20 உலககோப்பை வென்ற சாம்சன், சிவம் துபேவுக்கும், அண்டர் 19 உலககோப்பை வென்ற ஆயுஷ் மாத்ரேவுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதன் பிறகு சிஎஸ்கே ஹால் ஆப் பேம் கௌரவம் ரெய்னா மற்றும் ஹைடனுக்கு வழங்கி கெரளவிக்கப்பட்டனர்.


Click it and Unblock the Notifications