Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: முதலில் Trial பால் போடுங்க.. அப்புறம் கெத்து காட்டிய ரெய்னா.. சிக்சர்களை பறக்கவிட்ட ஹைடன்

சென்னை: ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சேப்பாக்கம் மைதானத்தில் 'சிஎஸ்கே ரோர் 2026' என்ற சிறப்பு நிகழ்வை நடத்தியது. இதில் முன்னாள், இந்நாள் CSK வீரர்கள் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தனர். ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, சிஎஸ்கேவின் அனுபவமிக்க பழைய வீரர்களுக்கும் (OG) இளம் வீரர்களுக்கும் இடையே ஒரு நட்புரீதியிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் சிஎஸ்கே ஜாம்பவான்களுக்கு தற்போதைய வீரர்கள் பந்துவீசி ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தந்தனர்.

சென்னை அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா பேட்டிங் செய்ய களமிறங்கினார். அவருக்கு நூர் அஹ்மத் தெரு கிரிக்கெட் போல் ஒரு 'ட்ரையல்' பந்தை வீச, ரெய்னா முதல் பந்தையே தனது டிரேட் மார்க் ஷாட் மூலம் விளாசினார். இதைக் கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் குதித்தனர்.

முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன், சிஎஸ்கே ஜெர்சி மற்றும் வேட்டியுடன் பேட்டிங் செய்ய வந்தார். சிவம் துபே மெதுவாக வீசப்பட்ட பந்துகளை ஹைடன் ஒவ்வொன்றையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். "வயதானாலும் அதிரடி குறையவில்லை. அவரையே அணியில் சேர்க்கலாம்" என ரசிகர்கள் வியந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.

ரெய்னாவும் ஹைடனும் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, முன்னாள் கேப்டன் தோனி விக்கெட் கீப்பராக நின்று அவர்களைக் கிண்டல் செய்து சந்தோஷத்துடன் சிரித்தார். இந்த சுவாரஸ்யமான நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சிஎஸ்கேவின் ஃபில்டிங் பயிற்சியாளராக ரெய்னா வருவார் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில், மேத்யூ ஹைடன் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று சிஎஸ்கே அணியின் ஹால் ஆஃப் பேம் என்ற அந்தஸ்தை ரெய்னாவுக்கும், ஹைடனுக்கும் இந்த நிகழ்ச்சியில் கவுரவம் வழங்கப்பட்டது.

Story first published: Sunday, March 22, 2026, 20:57 [IST]
Other articles published on Mar 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+