Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: சேப்பாக்கத்தில் OG சிஎஸ்கே vs புதிய சிஎஸ்கே மேட்ச்.. ஏ.ஆர். ரஹ்மான் இசை கச்சேரி!

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ரசிகர்களுக்காக நடத்தும் 'ROAR'26' எனும் பிரம்மாண்ட திருவிழா நடைபெறுகிறது. ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு முன்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்த இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமே, 'பழைய' சிஎஸ்கே வீரர்கள் மற்றும் 'தற்போதைய' சிஎஸ்கே வீரர்கள் மோதும் போட்டிதான். சுரேஷ் ரெய்னா தலைமையில் மேத்யூ ஹெய்டன், முரளி விஜய், எஸ். பத்ரிநாத் உள்ளிட்ட முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் இன்று மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளனர். இவர்களுக்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான தற்போதைய சிஎஸ்கே வீரர்கள் களம் காண உள்ளனர். பழைய நினைவுகளையும் தற்போதைய வேகத்தையும் ஒரே இடத்தில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

CSK ROAR 26 at Chepauk Old vs New CSK Clash and A R Rahman Live Concert Today in Chennai

கிரிக்கெட் மட்டுமல்லாமல், இசை உலகைச் சேர்ந்த ஜாம்பவானும் இன்று சேப்பாக்கத்தில் இணையப் போகிறார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் நேரடி இசை கச்சேரி இன்று இரவு நடைபெறவுள்ளது. கிரிக்கெட்டும் இசையும் சங்கமிக்கும் இந்த மாலை பொழுது, சென்னை ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என சிஎஸ்கே அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் இத்தனை ஆண்டுகால பயணம் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்காகவே இந்த விழா அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் கடந்த மார்ச் 15 முதலே சிஎஸ்கே இணையதளம் மற்றும் செயலி மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இன்று மாலை சேப்பாக்கம் வரும் ரசிகர்கள் அனைவரும் மஞ்சள் நிற உடைகளை அணிந்து வந்து மைதானத்தை மஞ்சள் கடலாக மாற்ற வேண்டும் என அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. சிஎஸ்கே வரலாற்றில் இது ஒரு மறக்க முடியாத இரவாக அமையப் போகிறது. பழைய ஜாம்பவான்கள் மீண்டும் மஞ்சள் சீருடையில் விளையாடுவதைப் பார்க்க ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலாக உள்ளது.

Story first published: Sunday, March 22, 2026, 10:52 [IST]
Other articles published on Mar 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+