Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்விகள்ல இருந்து வெளிவர்றதுக்கு முக்கிய காரணம்... ருதுராஜ் கெய்க்வாட் நெகிழ்ச்சி

டெல்லி : தன்னுடைய தோல்விகளில் இருந்து வெளிவர தனக்கு சிஎஸ்கே உதவியதாக ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2020 தொடரில் சிஎஸ்கே சார்பில் 6 போட்டிகளில் விளையாடிய கெய்க்வாட் 3 அரைசதங்களை எடுத்திருந்தார்.

கடந்த தொடரில் ப்ளே-ஆப்பிற்கு கூட சிஎஸ்கே அணி முன்னேறாத நிலையில் 6 போட்டிகளில் விளையாடி 204 ரன்களை எடுத்திருந்தார் கெய்க்வாட்.

சொதப்பிய சிஎஸ்கே

சொதப்பிய சிஎஸ்கே

கடந்த ஐபிஎல் 2020 தொடரில் சிஎஸ்கே தனது சிறப்பான போட்டிகளை வெளிப்படுத்தவில்லை. இதையடுத்து ப்ளே ஆப் சுற்றிற்குகூட முன்னேறாமல் வெளியேறியது. துவக்க ஆட்டங்களில் சொதப்பினாலும் இறுதி போட்டிகளில் சமாளித்து வெற்றியை பெற்றது சிஎஸ்கே. அதற்கு முக்கிய காரணமாக விளங்கினார் ருதுராஜ் கெய்க்வாட்.

6 போட்டிகள்... 204 ரன்கள்

6 போட்டிகள்... 204 ரன்கள்

சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியின் விருப்பத்திற்குரிய பேட்ஸ்மேனாக கூறப்படுபவர் கெய்க்வாட். சென்னையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டங்களிலேயே அவர் தோனியை கவர்ந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் 2020 தொடரின் 6 போட்டிகளில் விளையாடிய கெய்க்வாட், 204 ரன்களை அடித்திருந்தார். இதில் 3 அரைசதங்களும் அடக்கம்.

சிஎஸ்கே குறித்து மகிழ்ச்சி

சிஎஸ்கே குறித்து மகிழ்ச்சி

இந்நிலையில் தற்போது எவ்வாறு தன்னுடைய தோல்விகளில் இருந்து வெளிவர சிஎஸ்கே உதவியது என்பது குறித்து மனம் திறந்துள்ளார் கெய்க்வாட். அணியின் சூழலே இதற்கு காரணம் என்றும் நாம் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் அணி வீரர்கள் நம்மிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆட்டத்தில் கவனம்

ஆட்டத்தில் கவனம்

அந்த விதத்தில் சிஎஸ்கே சிறப்பான அணி என்று ருதுராஜ் கெய்க்வாட் குறிப்பிட்டுள்ளார். அனைத்து வீரர்களையும் அமைதியான மற்றும் பொறுமையான வைத்துக் கொள்ள சிஎஸ்கே அணி எப்போதும் முனைப்பு காட்டியதாகவும் இந்த சூழலாலேயே தான் தன்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்த முடிந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

தோனி குறித்து பாராட்டு

தோனி குறித்து பாராட்டு

பயிற்சி போட்டிகளில் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங் குறித்து சிறப்பான ஆலோசனைகளை வழங்குவார் என்றும் அவருக்கு எப்போதுமே தனது பேட்டிங் பிடிக்கும் என்றும் முன்னதாக ருதுராஜ் தெரிவித்திருந்தார். ருதுராஜ் தொடர்ந்து இந்த சீசனிலும் சிஎஸ்கே அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, January 6, 2021, 12:44 [IST]
Other articles published on Jan 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+