Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை பயிற்சி முகாம் சிறப்பா.. தரமா நடக்குது.. ஆனா ஜடேஜா பங்கேற்கல

சென்னை : ஐபிஎல் 2020 தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி துவங்கவுள்ள நிலையில், வரும் 21ம் தேதி சிஎஸ்கே வீரர்கள் யூஏஇக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

Recommended Video

மாஸ்க் எங்கே? கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் காரை நிறுத்திய லேடி கான்ஸ்டபிள்

முன்னதாக சென்னையில் வரும் 15ம் தேதி துவங்கி 20ம் தேதிவரை சிதம்பரம் மைதானத்தில் தோனி, ரெய்னா உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் 15 பேருக்கு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

CSKs pre-season training camp in Chennai -Ravindra Jadeja to miss

சொந்த காரணங்களால் இந்த பயிற்சி முகாமில் ரவீந்திர ஜடேஜா பங்கேற்க மாட்டார் என்று அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2020 தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதி வரை யூஏஇயில் நடைபெறவுள்ளது. இதையொட்டி சிஎஸ்கே அணி வீரர்கள் வரும் 21ம் தேதி சார்ட்டர்ட் விமானம் மூலம் தங்களது பயணத்தை துவங்கவுள்ளனர். முன்னதாக அந்த அணியின் வீரர்களுக்கு சென்னை சிதம்பரம் மைதானத்தில் வரும் 15ம் தேதி துவங்கி 20ம் தேதி வரையில் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

தோனி, ஹர்பஜன் சிங், ரெய்னா, அம்பத்தி ராயுடு உள்ளிட்ட 15 வீரர்கள் இதில் பங்கேற்கவுள்ள நிலையில், வீரர்களுக்கு முதலில் பிட்னஸ் தொடர்ந்து சில கிரிக்கெட் பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளன. இதில் பௌலிங் கோச் எல் பாலாஜி மட்டுமே பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பயிற்சி முகாமில் ரவீந்திர ஜடேஜா பங்கேற்க மாட்டார் என்று அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சொந்த காரணங்களால் பயிற்சி முகாமில் பங்கேற்காத ஜடேஜா, வரும் 21ம் தேதி யூஏஇ பயணத்தின்போது சென்னை வருவார் என்றும் அவர் கூறினார்.

Story first published: Thursday, August 13, 2020, 20:53 [IST]
Other articles published on Aug 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+