For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் மினி ஏலம்.. சிஎஸ்கேவில் உள்ள முக்கிய பிரச்சினைகள்.. சரிசெய்ய தேவையான வீரர்கள்.. முழு விவரம்

கொச்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னிடம் உள்ள சில முக்கிய குறைகளை சரிசெய்துக்கொள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் களமிறங்குகிறது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் வீரர்கள் மினி ஏலம் இன்று கொச்சியில் நடைபெறுகிறது. சரியாக இன்று மதியம் 2.30 மணியளவில் ஏலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் கடைசி சீசன் இதுவாக இருக்கலாம். எனவே அவருக்கு பின் அணியை செட்டில் செய்துக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதற்காக தான் இந்த ஏலம் பயன்படப்போகிறது.

 சிஎஸ்கேவின் திட்டம்

சிஎஸ்கேவின் திட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 வீரர்களை கழட்டிவிட்டு தன்னிடம் தற்போது 18 வீரர்களை கையில் வைத்துள்ளது. 7 வீரர்களை நிரப்புவதற்காக அந்த அணியிடம் ரூ.20.45 கோடி உள்ளது. தற்போதுள்ள அணியிலேயே டாப் ஆர்டர், ஃபினிஷர், ஆல்ரவுண்டர்கள், ஸ்பின்னர்ஸ், வேகப்பந்துவீச்சாளர்கள் என அனைத்து துறைகளுக்குமான வீரர்கள் உள்ளனர். ஆனால் சில குறைகள் மட்டும் அதில் உள்ளன.

டெத் ஓவர் பிரச்சினை

டெத் ஓவர் பிரச்சினை

கடந்த 2022 ஐபிஎல் சீசனில் டெத் ஓவர்களில் அதிக ரன்களை கசியவிட்ட 2வது அணி சிஎஸ்கே தான். ஓவருக்கு 11.46 ரன்களை தந்தது. வேகப்பந்துவீச்சாளர்கள் முகேஷ் சௌத்ரி (13.69) பிரிட்டோரியஸ் (12.70) என மிகவும் மோசமாக இருந்தனர். தீபக் சஹாரும் 10க்கு மேல் உள்ளார். எனவே ரன்களை கட்டுப்படுத்த டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் சிஎஸ்கேவுக்கு தேவை. சாம் கரண் முதல் குறியாக இருந்தாலும், அவருக்கு பல அணிகளும் குறி வைத்துள்ளதால் போட்டி நிலவுகிறது.

அதிவேக பேசர்

அதிவேக பேசர்

சிஎஸ்கேவில் பதிரானா மட்டுமே 140+ கிமீ வேகத்தில் தொடர்ச்சியாக வீசக்கூடிய பவுலராக இருக்கிறார். அதிவேகமாக பந்துவீசிய வரை பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் தர முடியும் என்பதால் நிச்சயம் ஒரு அதிக வேகத்தில் வீசக்கூடிய வீரரை தோனியின் படை குறிவைக்க வேண்டியுள்ளது.

ஸ்பின்னர்கள் தேவை

ஸ்பின்னர்கள் தேவை

சிஎஸ்கே நீண்ட வருடங்களாகவே விரிஸ்ட் ஸ்பின்னர்கள் மீது ஆர்வம் காட்டுவதே இல்லை. கடைசியாக 2019ல் இம்ரான் தாஹீர் இருந்தார். தற்போது லெக் ஸ்பின்னர் பிரசாந்த் சொலாங்கி அதனை சரிசெய்து வருகிறார். எனவே ஒரு நல்ல விரிஸ்ட் ஸ்பின்னரை சிஎஸ்கே அணியில் எடுக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் சுழலுக்கு சாதகமான சென்னையில் தான் பாதி போட்டிகள் நடைபெறவுள்ளன.

மிடில் ஆர்டர் சிக்கல்

மிடில் ஆர்டர் சிக்கல்

சிஎஸ்கே மிடில் ஆர்டரில் இருந்த என்.ஜகதீசன், ஹரி நிஷாந்த் போன்றோர் கழட்டிவிடப்பட்டனர். உத்தப்பாவும் ஓய்வு பெற்றுவிட்டார். அம்பத்தி ராயுடும் நல்ல ஃபார்மில் இல்லை. எனவே மிடில் ஆர்டரில் தாங்கி நிற்கக்கூடிய ஒரு நல்ல அனுபவ வீரர் தேவை. இதே போல அதிகப்படியாக இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் வலதுகை பேட்ஸ்மேன்களாக வாங்குவதும் முக்கியம்.

Story first published: Friday, December 23, 2022, 6:41 [IST]
Other articles published on Dec 23, 2022
English summary
CSk's problem and needs ahead of IPL 2023 Mini auction, here is the skipper dhoni's plan for that
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+